குழந்தை கத்துதுன்னு நினைச்சுக்கோங்க.. ஆஸி. கேப்டனை கலாய்த்த அஸ்வின் மனைவி.. தரமான சம்பவம்!
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் டிம் பெயின் தொடர்ந்து ஸ்லெட்ஜ் செய்தால் அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அஸ்வினுக்கு அவரின் மனைவி ப்ரீத்தி அஸ்வின் ஐடியா வழங்கி உள்ளார் .
இந்தியாவிற்கு எதிரான இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் இந்திய வீரர்களை தனது வார்த்தைகள் மூலம் தொடர்ந்து சீண்டி வந்தார். முக்கியமாக அஸ்வினை டிம் பெயின் தொடர்ந்து சீண்டி வந்தார்.
அடுத்த போட்டிக்கு ரெடியாக்குங்கள் என்று கிண்டல் செய்ய தொடங்கியவர் ஐபிஎல்லில் உங்களை யாருக்குமே பிடிக்காதாமே உண்மையா என்று கேட்டார். அஸ்வின் இதற்கு அடுத்தடுத்து பதிலடி கொடுத்தார்.

கோபம்
ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் கோபம் அடைந்த அஸ்வின் பேட்டிங் செய்வதை நிறுத்தினார். டிம் பெயின் பேசுவதை நிறுத்தினால் மட்டுமே பேட்டிங் செய்வேன். அவர் தொந்தரவு செய்கிறார் என்று அஸ்வின் கோபம் அடையும் நிலைக்கு சென்றார்.

கோபம் அடையும் நிலை
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் டிம் பெயின் தொடர்ந்து ஸ்லெட்ஜ் செய்தால் அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அஸ்வினுக்கு அவரின் மனைவி ப்ரீத்தி அஸ்வின் ஐடியா வழங்கி உள்ளார். அஸ்வின் மனைவி ப்ரீத்தி அஸ்வின் கடந்த சில நாட்களாக கிரிக்கெட் குறித்து டிவிட் செய்து வருகிறார். ஆஸ்திரேலிய தொடர் குறித்து சுவாரசியமாக டிவிட் செய்து வருகிறார்.

டிவிட்
இந்த நிலையில் ப்ரீத்தி அஸ்வின் செய்துள்ள டிவிட்டில் களத்தில் கூலாக இருங்கள் அஸ்வின். வீட்டில் நம் குழந்தை ஆத்யா காலை மூன்று மணிக்கு எழுந்து அழுவது போல நினைத்துக் கொள்ளுங்கள்.குழந்தை கத்துவதாக நினைத்து இதை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லுங்கள் என்று ப்ரீத்தி அஸ்வின், அஸ்வினுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

மன்னிப்பு
இந்த நிலையில் அஸ்வினுக்கு எதிராக தான் நடந்து கொண்ட விதம் தவறாக இருந்தது என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆட்டத்தின் பிரஷர் காரணமாக நான் தவறாக செயல்பட்டுவிட்டேன். என்னுடைய அணியின் தரத்தை விட குறைவாக நான் நடந்து கொண்டேன், என்று திம் பெயின் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications