Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குழந்தைங்க கிட்ட மாட்டி விடவா? பிறந்த நாளன்று அஸ்வினை செல்லமாக மிரட்டிய மனைவி

Recommended Video

பிறந்த நாளன்று அஸ்வினை செல்லமாக மிரட்டிய மனைவி- வீடியோ

சென்னை : நம் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்.

அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதில் மிகவும் ரசிக்கும்படி அவரது மனைவி ப்ரீத்தி, ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் சார்ந்த அமைப்புகளும் ட்வீட் போட்டு நம் அஸ்வினை வாழ்த்தியுள்ளனர்.

மனைவியின் செல்ல வாழ்த்து

அஸ்வின் மனைவி ப்ரீத்தி தன் வாழ்த்தில் "பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பே! சீக்கிரம் பார்க்கலாம். என் பெண்களுக்கு "குட்பை" சொல்வது பிடிக்காது. அவர்களுக்கு நினைவுபடுத்தவா?" என செல்லமாக மிரட்டியுள்ளார். அதாவது, அஸ்வின் தற்போது இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் ஆடி வருகிறார். எனவே, சென்னையில் அவர் இல்லை. அவர் வீட்டை விட்டுச் செல்வது அவரின் மகள்களுக்கு பிடிக்காது. அதை பிறந்த நாளன்று ஞாபகப்படுத்தவா? என மிரட்டியுள்ளார் அவர்.

வேகமான 300 விக்கெட்கள்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள வாழ்த்தில், "2010இல் இருந்து போட்டிகளை இந்தியாவிற்கு சாதகமாக சுழல வைத்து வருகிறார். இதோ இவர் தான் டென்னிஸ் லில்லீயின் சாதனையை முறியடித்து வேகமாக 300விக்கெட்கள் வீழ்த்தியவர்" என கூறியுள்ளது.

பிசிசிஐ சூப்பர் வீடியோ

பிசிசிஐ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "எங்கள் சுழல் வித்தகருக்கு இதோ எங்கள் வாழ்த்துக்கள்" என கோரி அஸ்வின் எடுத்த அற்புதமான விக்கெட்களை வீடியோவாக வெளியிட்டுள்ளது.

ஐசிசி வாழ்த்து

ஐசிசி வாழ்த்து

அஸ்வினுக்கு வாழ்த்து சொல்லியுள்ள ஐசிசி, அவரின் சிறந்த சாதனை மைல்கல்களை பட்டியலிட்டு வாழ்த்து கூறி உள்ளது. "வேகமாக 300 விக்கெட்கள் வீழ்த்தியவர். 529 சர்வதேச விக்கெட்கள், 4 டெஸ்ட் சதங்கள், 2016ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது. இந்தியாவின் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் " என ஐசிசி தன் வாழ்த்தில் கூறி உள்ளது.

Story first published: Monday, September 17, 2018, 14:15 [IST]
Other articles published on Sep 17, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+