அவரால் நிற்க கூட முடியவில்லை.. வலியில் துடித்தார்.. நேற்று என்ன நடந்தது? அஸ்வின் மனைவி டிவிட்!
சிட்னி: நேற்று அஸ்வின் படுக்கைக்கு செல்லும் போதே அவருக்கு முதுகில் பெரிய அளவில் வலி இருந்தது என்று அவரின் மனைவி பிரீத்தி அஸ்வின் கூறியுள்ளார்.
மிகவும் விறுவிறுப்பாக சென்ற ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. அஸ்வின் - விஹாரி சிறப்பான ஜோடி அமைத்து இந்திய அணியை கடைசிவரை உறுதியாக காத்து ஆட்டத்தை டிரா செய்தனர்.
அஸ்வின் 128 பந்தில் 39 ரன்கள் , விஹாரி 161 பந்தில் 23 ரன்கள் எடுத்து இந்திய அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து மீட்டு டிரா செய்தனர். இந்திய அணி 131 ஓவருக்கு 5 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிரா ஆனது.

அஸ்வின்
இன்று அஸ்வின் களத்திற்கு வருவதற்கு முன்பே அவருக்கு வயிற்றிலும் பின் முதுகிலும் காயம் இருந்தது. இதனால் அவரால் சரியாக உட்கார முடியாவில்லை. அதேபோல் ஆட்டத்தின் போதும் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்கு இடையிலும் அஸ்வின் இன்று உறுதியாக ஆடினார்.

பேட்டி
காயத்திற்கு இடையிலும் அஸ்வின் 128 பந்துகளை பிடித்து 38 ரன்களை எடுத்தார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் அஸ்வின் இந்த பேட்டிங் செய்தார். அஸ்வினின் சிறப்பான பேட்டிங் குறித்து அஸ்வினின் மனைவி பிரீத்தி அஸ்வின் டிவிட் செய்துள்ளார்.

என்ன சொன்னார்
பிரீத்தி அஸ்வின் செய்துள்ள டிவிட்டில், நேற்று அஸ்வின் படுக்கைக்கு செல்லும் போதே அவருக்கு முதுகில் பிரச்சனை இருந்தது. அவருக்கு மிக கடுமையான வலி இருந்தது. அவரால் எழுந்து நிற்க முடியவில்லை.

நிற்க முடியவில்லை
இன்று காலை எழுந்த போது அவரால் நிற்க முடியவில்லை. கீழே குனிந்து அவரால் ஷூ லேசை கூட கட்ட முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் அஸ்வின் இன்று ஆடிய ஆட்டம் எனக்கு பெரிய ஆச்சர்யம் அளித்துள்ளது, என்று பிரீத்தி அஸ்வின் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications