அஸ்வின் இருந்திருந்தா போன தடவையே இந்தியா ஜெயிச்சுருக்கும்! அஸ்வினை புகழும் ஆஸி. வீரர்
Recommended Video

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ், இந்திய அணியில் அஸ்வின் தான் இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை நிர்ணயிக்கும் வீரராக இருப்பார் என கூறியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கே டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது.
ஆஸ்திரேலிய அணி தற்போது பலவீனமாக இருக்கும் நிலையில் இந்தியா எளிதாக வெல்லும் என கணிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரராக விளங்கிய டீன் ஜோன்ஸ் தன் கருத்துக்களை கூறியுள்ளார்.

அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார்
டீன் ஜோன்ஸ், "கடந்த முறை ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார். அந்த தொடரின் முதல் போட்டியில் அஸ்வின் ஆடி இருந்தால் அந்த தொடரின் முடிவே மாறி இருக்கும்" என அஸ்வினுக்கு புகழாரம் சூட்டினார்.

இந்தியா நிச்சயம் வெற்றி பெறும்
இந்த முறை ஆஸ்திரேலியா பலவீனமாக இருப்பதால் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என கணித்துள்ள ஜோன்ஸ், இந்தியா வெற்றி பெறாவிட்டால் தான் அது ஆச்சரியம் என கூறுகிறார். இவர் இப்படி கூற முக்கிய காரணம், ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இல்லை என்பதே ஆகும்.

சுழலை எப்படி ஆடுவார்கள்?
மேலும், டீன் ஜோன்ஸ் கூறுகையில், "ஆஸ்திரேலியா அஸ்வின் மற்றும் குல்தீப் பந்துவீச்சை எப்படி ஆடுவார்கள் என்பது தான் இந்த முறை டெஸ்ட் தொடரின் முக்கிய அம்சமாகும். ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் ஆரோன் பின்ச் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அவர்கள் இருவரும் தான் சுழற்பந்து வீச்சை நன்றாக ஆடுவார்கள்" என்றார்.

அஸ்வின் மற்றும் குல்தீப் தான் முக்கியம்
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அஸ்வின் மற்றும் குல்தீப் அதிக விக்கெட் எடுத்தார்கள். அதே சமயம், இருவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்த முறை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இவர்கள் இருவரும் தான் வெற்றி - தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுவார்கள் என்பதே டீன் ஜோன்ஸ்-இன் கருத்தாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications