For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி இந்திய அணியில சேர்க்க மாட்டாங்க…! ஸ்ரெய்ட்டா இனி கவுண்டி கிரிக்கெட் தான்…! தாவிய தமிழக வீரர்

மும்பை:இந்திய நட்சத்திர வீரரும், மன்கட் புகழ் பரப்பியவருமான அஸ்வின் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடுகிறார்.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அந்த தொடரில் அவர் செய்த மன்கட் அவுட்டுகள் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியது.

Ashwin will play 6 games for nottinghamshire

இந் நிலையில், இந்தாண்டு கவுண்டி சீசனில் அஸ்வின் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக பங்கேற்க உள்ளார். இது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் கூறி இருப்பதாவது:பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு கவுண்டி அணி நிர்வாகத்திடமிருந்து அழைப்பு வந்தால் இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதி உண்டு என ஏற்கனவே பிசிசிஐ தெரிவித்திருந்தது.

அதன்படி அஸ்வின் கவுண்டி கிரிக்கெட்டிர் விளையாட முழு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அஸ்வின் 6 போட்டிகளில் பங்கேற்க உள்ளார். பிசிசிஐ நிர்வாக இயக்குனர் மட்டும் ஆட்சேபணை சான்றிதழில் கையொப்பமிட்டால் அவர் இங்கிலாந்து சென்று விடுவார் என்று கூறினர்.

இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் அஜின்க்யா ரகானே ஏற்கனவே ஹாம்ஷைர் அணியில் விளையாட இங்கிலாந்து சென்று விட்டார்.கவுண்டி கிரிக்கெட்டில் ஹாம்ஷைர் அணிக்காக பங்கேற்கும் முதல் இந்திய வீரர் ரகானே என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வினை போலவே ரகானேவும் ஒருநாள் மற்றும் டி 20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Story first published: Monday, May 20, 2019, 17:00 [IST]
Other articles published on May 20, 2019
English summary
Ashwin will play 6 games for nottinghamshire.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+