For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த இருளில்.. அவரை சீண்ட கூடாது.. தமிழக வீரரால் கலக்கத்தில் ஆஸி. அணி.. தரமான சம்பவம் வெயிட்டிங்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் மிக முக்கியமான பங்கு வகிப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. ஒருநாள் மற்றும் டி 20 தொடர் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது.

ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவும், டி 20 தொடரில் இந்தியாவும் வென்றுவிட்டது. இதனால் டெஸ்ட் தொடரில் வெல்ல போகும் அணி எது என்று கேள்வி எழுந்துள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இந்த டெஸ்ட் நடக்க போகும் பிங்க் பால் போட்டிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிங்க் பால் போட்டிகள் என்பது இரவு பகல் ஆட்டம் ஆகும். இதில் இரவு நேரத்திலும் பந்துகள் தெரிய வேண்டும் என்பதற்காக பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படும். இந்த பிங்க் பந்துகள் எளிதாக ஸ்விங் ஆகும்.

எப்படி

எப்படி

இதன் காரணமாக ஸ்பின் பவுலர்கள் எளிதாக பவுலிங் செய்ய முடியும். முக்கியமாக முதல் 10 ஓவர்கள் கடந்த பின் ஸ்பின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீச முடியும். பந்தை மிக குறைந்த வேகத்தில் எளிதாக திருப்ப முடியும். முக்கியமாக ஆப் ஸ்பின் பவுலர்கள் இதில் மாயம் நிகழ்த்தலாம்.

சிக்கல்

சிக்கல்

இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் மிக முக்கியமான பங்கு வகிப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர் ஆப் ஸ்பின்னர். தேவைப்படும் நேரங்களில் லெக் ஸ்பின் பவுலிங்கும் செய்வார். பயிற்சி ஆட்டங்களிலேயே இவர் சிறப்பாக பவுலிங் செய்தார்.

இரவு நேரம்

இரவு நேரம்

இதில் அதிகம் கவனிக்க வேண்டியது இரவு நேரத்தில் பந்துகள் ஸ்விங் ஆவதை கண்டுபிடிக்க முடியாது. பிங்க் பந்துகள் இரவு நேரத்தில் எப்படி வரும் என்பதை கணிக்க முடியாது. இதனால் பிங்க் பால் போட்டிகளில் இரவு நேரத்தில் அஸ்வின் அதிக ஓவர்களை வீசுவார் என்று கூறப்படுகிறது.

அஸ்வின் ராஜ்ஜியம்

அஸ்வின் ராஜ்ஜியம்

இதனால் இரவு நேரத்தில் அஸ்வினை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் எளிதாக அவுட்டாக வாய்ப்புள்ளது. முடிந்த அளவு இவரின் பவுலிங்கில் ஷாட் அடிக்காமல், பந்தை தடுத்து ஆட ஆஸ்திரேலிய வீரர்கள் திட்டமிட்டு வருகிறார். அஸ்வின் போலவே குல்தீப் யாதவும் பிங்க் பால் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

Story first published: Monday, December 14, 2020, 14:11 [IST]
Other articles published on Dec 14, 2020
English summary
Ravichandran Ashwin will play a major role in Test Team India against Australia.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+