Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின், ஷேவாக்கை நெருங்கிய அஸ்வின்.. தொடர் நாயகன் விருது வெல்வதில் புதிய சாதனை

டெல்லி: அதிக அளவில் தொடர் நாயகன் விருதுகளை வென்ற இந்திய சாதனையாளர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர ஷேவாக்கை நெருங்கி விட்டார் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்திய வீரர்களில் அதிக அளவில் தொடர் நாயகன் விருதை வென்ற சாதனையாளர்களாக சச்சினும், ஷேவாக்கும் மட்டுமே உள்ளனர். தற்போது அவர்களுக்கு அடுத்த இடத்தை அஸ்வின் பிடித்துள்ளார்.

நேற்று இலங்கைக்கு எதிரான தொடரில், அஸ்வின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் அவர் 21 விக்கெட்களைச் சாய்த்து இலங்கையை நிலை குலைய வைத்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

சச்சின் - ஷேவாக்

சச்சின் - ஷேவாக்

இந்திய வீரர்களில் இதுவரை அதிக அளவில் டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற சாதனை இரண்டே இரண்டு வீரர்களிடம் மட்டுமே உள்ளது. அவர்கள் சச்சின் மற்றும் அவரது "ஜெராக்ஸ்" காப்பியான ஷேவாக் ஆகியோர்தான்.

ஆளுக்கு 5 முறை

ஆளுக்கு 5 முறை

இதில் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். அதேபோல 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஷேவாக்கும் 5 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

4வது முறையாக வென்ற அஸ்வின்

4வது முறையாக வென்ற அஸ்வின்

இந்த நிலையில் வெறும் 28 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள அஸ்வின் நேற்று 4வது முறையாக தொடர் நாயகன் விருதை வென்று அசத்தி விட்டார். இன்னும் ஒரு தொடர் நாயகன் விருதை வென்றால் அவர் சச்சின், ஷேவாக் சாதனையை சமன் செய்வார்.

பல வரலாறுகளைப் படைப்பார் அஸ்வின்

பல வரலாறுகளைப் படைப்பார் அஸ்வின்

அஸ்வின் மிகக் குறைவான டெஸ்ட் போட்டிகளிலேயே ஆடியுள்ளார். அதிலேயே இந்த அளவுக்கு சாதனை படைத்துள்ளதால், உலக அளவில் பல சாதனைகளை அவர் படைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

முதலிடத்தில் முரளிதரன்

முதலிடத்தில் முரளிதரன்

அதேசமயம், சர்வதேச அளவில் அதிக அளவில் தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரராக முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார் முத்தையா முரளீதரன். இவர் மொத்தம் 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றவர் ஆவார்.

Story first published: Wednesday, September 2, 2015, 11:11 [IST]
Other articles published on Sep 2, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+