Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதுக்குள்ள அஸ்வினை ரிடையர்மென்ட் பற்றி நினைக்க வச்சுட்டீங்களேய்யா!

சென்னை: இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வில் ஓரங்கட்டப்பட்டுள்ள, தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், தனது ரிடையர்மென்ட் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இருந்த, 31 வயதாகும் ரவிசந்திரன் அஸ்வினுக்கு கடந்த சில தொடர்களாக வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

மிகவும் கடினமான யோ - யோ டெஸ்ட் செய்து உடல்தகுதியையும் நிரூபித்துள்ளார். ஆனாலும், கடந்த சில தொடர்களாக அவர் இந்திய அணிக்கு பரிசீலிக்கப்படவில்லை.

ஒருதினப் போட்டியில் 150 விக்கெட்

ஒருதினப் போட்டியில் 150 விக்கெட்

52 டெஸ்ட் போட்டிகளில், 292 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார் அஸ்வின். 111 ஒருதினப் போட்டிகளில், 150 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இரண்டிலும் அவருடைய சராசரி மிக சிறப்பாக உள்ளது.

அஸ்வின் ஓய்வு எப்போது

அஸ்வின் ஓய்வு எப்போது

இந்த நிலையில், தனது ரிடையர்மென்ட் பற்றி ஒரு பேட்டியில் அஸ்வின் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில், 618 விக்கெட்கள் எடுத்ததும் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.

கும்ப்ளேக்கு அஸ்வினின் மரியாதை

கும்ப்ளேக்கு அஸ்வினின் மரியாதை

அது என்ன, 618 விக்கெட் என்றால், நான் அனில் கும்ப்ளேயின் தீவிர ரசிகன். அவர், 619 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவருடைய சாதனையை முறியடிக்க விரும்பவில்லை. அதனால், 618 விக்கெட் எடுத்ததும் ஓய்வு பெற்று விடுவேன் என்று பவ்யமாக கூறுகிறார் அஸ்வின்.

கும்ப்ளே மரியாதைதாதன் காரணமா

கும்ப்ளே மரியாதைதாதன் காரணமா

கும்ப்ளேவுக்கும் கோஹ்லிக்கும் ஏழாம் பொருத்தம். ஒரு வேளை அஸ்வின் கும்ப்ளே மீது இத்தனை பெரிய பக்தியுடன் இருப்பதால்தான் அவருக்கு அணியில் தொடர்ந்து இடம் கிடைக்காமல் போய்க் கொண்டிருக்கிறதோ.. டவுட்டுதான்!

Story first published: Saturday, October 21, 2017, 13:15 [IST]
Other articles published on Oct 21, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+