பேட்மிண்டனில் அடுத்த "ஷாக்"... ஜுவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா மீண்டும் தோல்வி!
ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடி மீண்டும் தோல்வியைத் தழுவியது.
பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஜூவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி, நெதர்லாந்தின் செலினா பைக் மற்றும் மஸ்கின் ஜோடியுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், இந்திய ஜோடி 16-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் நெதர்லாந்து இணையிடம் வீழ்ந்தது. இதன் மூலம் காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.
முன்னதாக நடந்த முதல் சுற்று போட்டியில் உலகின் நம்பர் 1 ஜோடியான ஜப்பானின் மிசாகி மட்சுடோமோ மற்றும் அயாகா டகசாகி ஜோடியிடம், இந்திய ஜோடி 15-21, 10-21 என்ற நேரடி செட் கணக்கில் தோற்றுப் போனது.
Story first published: Friday, August 12, 2016, 20:07 [IST]
Other articles published on Aug 12, 2016


Click it and Unblock the Notifications