Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முஹம்மது ஹபீஸ் இல்லை..ஆசிய கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் : ஆசிய கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றான பாகிஸ்தான் அணி நேற்று 16 பேர் கொண்ட அணியை அறிவித்தது.

ஆசியா கண்டத்தை சேர்ந்த ஆறு அணிகள் பங்குபெறும் ஆசிய கோப்பை போட்டிகள் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்ஸில் தொடங்க இருக்கின்றன.

asia cup 05-09-2018


இந்தியா,இலங்கை,பங்களாதேஷ்,பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் 6ஆவதாக பங்குபெறும் அணிக்காக தகுதி போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியில் 6 வேகபந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில் அனுபவ வீரர் முஹம்மது ஹபீஸ் மற்றும் யோ யோ டெஸ்டில் தகுதி பெறாத இமாத் வாசிம் ஆகியோர் ஆசிய கோப்பைக்கான அணியில் இடம் பெறவில்லை.

தற்போதைய நிலையில் பாகிஸ்தான் மிகவும் வலுவான அணியாக திகழ்கிறது. பேட்டிங்,பௌலிங் மற்றும் பீல்டிங் ஆகிய துறைகளில் அந்த அணி வலிமையான வீரர்களை கொண்டுள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் பாக்கர் ஜமான் சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

சர்பராஸ் அஹமது தலைமையிலான பாகிஸ்தான் அணி விவரம் :

சர்பராஸ் அஹமது(கேப்டன்),பாக்கர் ஜமான்,இமாம் உல் ஹக்,ஷான் மசூத்,பாபர் ஆசாம்,சோயிப் மாலிக்,ஹாரிஸ் சொஹைல்,ஆசிப் அலி,முகமத் நவாஸ்,பாஹீம் அஷ்ரப்,ஷதாப் கான்,முகமத் ஆமிர்,ஹசன் அலி,ஜுனைட் கான்,உஸ்மான் கான்,ஷஹீன் அப்ரிடி .

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.




Story first published: Wednesday, September 5, 2018, 10:44 [IST]
Other articles published on Sep 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+