Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 245 ரன்கள் குவித்த இந்தியா

மிர்பூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 245 ரன்கள் குவித்தது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்காகிஸ்தான் ஆகிய 5 அணிகள் இடையிலான 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிசுற்றுக்கு முன்னேறும். பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய முன்னணி அணிகளை தோற்கடித்துள்ள இலங்கையின் இறுதிவாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

Asia Cup 2014: Pakistan win toss, elects to field first

மற்றொரு இடத்திற்கு எஞ்சிய 4 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த தொடரில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டம் மிர்பூரில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்களைக் குவித்தது.

இந்திய அணியின் அம்பாத்தி ராயுடு 58 ரன்களையும் ரோகித் சர்மா 56, ஜடேஜா 52 ரன்களைக் குவித்தனர். பாகிஸ்தானின் அஜ்மல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Sunday, March 2, 2014, 17:30 [IST]
Other articles published on Mar 2, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+