Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாக்கா சென்றது இந்திய அணி.. ஆசியா கோப்பைப் போட்டியில் ஆடுவதற்காக!

மும்பை: கேப்டன் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஆசியாக் கோப்பை போட்டியில் விளையாடுவற்காக இன்று டாக்கா புறப்பட்டுச் சென்றது.

5 நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியப் போட்டி கிரிக்கெட் தொடர் டாக்காவில் நடைபெறுகிறது. இப்போட்டி பிப்ரவரி 25ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெறும்.

இதற்கான இந்திய அணி இன்று டாக்கா புறப்பட்டுச் சென்றது. கேப்ன் டோணிக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. இதையடுத்து கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டாக்கா சென்றுள்ளது.

Asia Cup 2014: Team India leaves for Dhaka

கடைசியாக இந்தியா இத்தொடரை 2010ம் ஆண்டு வென்றிருந்தது. அது இந்தியாவுக்கு 5வது கோப்பையாகும். இந்த முறை மீண்டும் கோப்பையை வெல்ல கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சீரியஸாக முயற்சிக்கும் என்று நம்பலாம்.

இந்தியா - வங்கதேசம் இடையே பிப்ரவரி 26ம் தேதி போட்டி நடைபெறுகிறது. ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடைபெறும்.

இந்தப் போட்டியைத் தொடர்ந்து பிப்ரவரி 28ம் தேதி இலங்கையுடனும், மார்ச் 2ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 5ம் தேதி ஆப்கானிஸ்தானுடனும் இந்தியா மோதும்.

மார்ச் 8ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.

இந்திய அணி - விராத் கோஹ்லி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, சட்டேஸ்வர் புஜாரா, அம்பட்டி ராயுடு, அஜிங்கியா ரஹானே, திணேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஆர். அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகம்மது சமி, வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே.

Story first published: Sunday, February 23, 2014, 17:46 [IST]
Other articles published on Feb 23, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+