Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டம் காட்டிய ஆப்கானிஸ்தான்.. இந்தியா, பாகிஸ்தான் ஜாக்கிரதையா இருக்கணும்

அபுதாபி : ஆசிய கோப்பை தொடரில் நேற்று ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் மோதின. அதில் ஆப்கன் 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

நேற்று தன் 20வது பிறந்தநாளில் ரஷித் கான் பேட்டிங்கில் கலக்கி எடுத்து, ஆப்கன் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

இன்று இந்திய அணியுடன் சூப்பர் 4 போட்டி இருப்பதால், முக்கியமற்ற லீக்கான ஆப்கன் போட்டியில் வங்கதேசத்தின் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

பேட்டிங் செய்த ஆப்கன்

பேட்டிங் செய்த ஆப்கன்

டாஸ் வென்ற ஆப்கன் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கன் துவக்கம் முதல் விக்கெட்களை இழந்து வந்தது. 79 ரன்களில் 3 விக்கெட்கள் இழந்த அந்த அணி, 160 ரன்கள் இருந்த போது 7 விக்கெட்கள் இழந்து இருந்தது. அப்போது 41வது ஓவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அந்த மோசமான நிலையில் இருந்து 255 ரன்கள் எடுத்தது ஆப்கன்.

ரஷித் கான் கலக்கல்

ரஷித் கான் கலக்கல்

8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஷித் கான், நயிப் இணைந்து 56 பந்துகளில் 95 ரன்கள் குவித்தனர். வங்கதேசம் அதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடைசி 10 ஓவர்களில் கோட்டை விட்டது. 50 ஓவர் முடிவில் ஆப்கன் 255 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் 57 ரன்களும், நயிப் 42 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

திணறிய வங்கதேசம்

திணறிய வங்கதேசம்

அடுத்து 256 ரன்களை துரத்திய வங்கதேசம், துவக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் ஷகிப் அல் ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்து 32 ரன்கள் வரை எடுத்தார். எனினும், தொடர்ந்து விக்கெட்கள் வீழ்ந்து கொண்டே இருந்தது. மேலும், ரன் குவிக்க மிகவும் திணறிய வங்கதேசம், கிட்டத்தட்ட டெஸ்ட் போட்டி போல ஆடியது. 42.1 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்த வங்கதேசம் வெறும் 119 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்தது.

ஸ்டார் ரஷித் கான்

ஸ்டார் ரஷித் கான்

ஆப்கன் அணியின் ரஷித் கான் 2 முக்கிய விக்கெட்களை நேற்று கைப்பற்றினார். அனுபவ பேட்ஸ்மேன்கள் ஷகிப் மற்றும் முகமதுல்லா விக்கெட்களை அவர் எடுத்தார். ஆப்கன் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளை வீழ்த்தி புதிய சாதனை செய்துள்ளது. ஆப்கனின் இந்த செயல்பாடுகள், ஆசிய கோப்பை வெல்லும் அணிகள் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்பதில் சந்தேகம் இல்லை.

Story first published: Friday, September 21, 2018, 10:28 [IST]
Other articles published on Sep 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+