ஆசிய கோப்பை: பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Recommended Video

துபாய் : இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆசிய கோப்பை குரூப் "ஏ" போட்டி இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 162 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.அடுத்து ஆடிய இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
நேற்று ஹாங்காங் அணிக்கு எதிராக தடுமாறிய இந்தியா, எளிய இலக்காக இருந்தாலும் இன்று பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளித்து வெற்றி பெறுமா? என்ற கேள்வியோடு பேட்டிங்கை துவக்கியது இந்தியா.

ரோஹித், தவான் சூப்பர் துவக்கம்
இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் நல்ல துவக்கம் அளித்துள்ளனர். முதலில் நிதானமாக துவங்கிய இவர்கள், 7வது ஓவர் முதல் அடித்து ஆட துவங்கினர். 7வது ஓவரை வீசிய உஸ்மான் கான் பந்துவீச்சை சிதறடித்தார் ரோஹித் சர்மா. அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் கிடைத்தது.

அரைசதம் அடித்த ரோஹித்
தவான், ரோஹித் இருவரும் நன்றாக நிலைத்து நின்று ஆடினர். 39 பந்துகளில் 52 ரன்கள் அடித்து அரைசதம் பூர்த்தி செய்த ரோஹித் ஷதாப் கான் சுழல் பந்தில் போல்டானார். தவான் 46 ரன்கள் அடித்த நிலையில் பாஹீம் பந்தில் கேட்ச் கொடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். நேற்றைய போட்டியில் தவான் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

ராயுடு, தினேஷ் கூட்டணி
அடுத்து அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் நிதானமாக ஆடினர். இருவரும் தலா 31 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்தியா 29 ஓவர்களில் 163 ரன்கள் இலக்கை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக கடந்து முக்கிய வெற்றியை பெற்றது.

புவி, ஜாதவ் சூப்பர்
முன்னதாக பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் பாபர் ஆசாம் 47 ரன்கள் மற்றும் ஷோயப் மாலிக் 43 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 43.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், கேதார் ஜாதவ் தலா 3 விக்கெட்கள், பும்ரா 2 விக்கெட்கள், குல்தீப் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications