Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை ஹாங்காங் போட்டியில் இந்திய அணியில் ஆடும் 11 வீரர்கள் பட்டியல்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா, ஹாங்காங் மோத உள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணியில் ஆடும் வீரர்கள் விவரம் தெரிய வந்துள்ளது.

சற்று முன் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

டாஸ் போடும் முன்பு இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது. இந்திய அணியில் எதிர்பார்ப்புக்கு மாறாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Asia cup 2018 - India vs Hongkong match. Toss won by Hongkong and elected to bowl

பலரும் அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்த்த ராகுல், பும்ரா அணியில் இடம் பெறவில்லை. தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் அளித்து இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

தன் முதல் போட்டியில் அறிமுகமாக உள்ளார் கலீல் அஹ்மது. அவர் இளம் பந்துவீச்சாளர் ஆவார். இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல இடம் பிடித்துள்ளார்.

ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் ஆடும் இந்திய வீரர்கள் விவரம் - ரோஹித் சர்மா, தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி, புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாக்குர், கலீல் அஹ்மது, சாஹல், குல்தீப் யாதவ்

இந்திய அணி நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆட உள்ள நிலையில், இன்றைய போட்டியை விரைவாக முடிக்க இந்தியா நினைக்கலாம். எனினும், இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளதால் முதல் 50 ஓவர்களையும் இந்தியா ஆடி முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஹாங்காங் வலுவில்லாத அணி என்ற நிலையில், பந்துவீச்சில் இந்தியா விரைவாக விக்கெட்கள் எடுத்தால் ஆட்டத்தை விரைவாக முடிக்க வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, September 18, 2018, 17:43 [IST]
Other articles published on Sep 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+