For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மோதும் அணி எது? பாகிஸ்தானா? வங்கதேசமா?

அபுதாபி : ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் இறுதிப் போட்டி இன்று நடை பெற உள்ளது. அந்த போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசம் மோதுகின்றன.

இந்தியா ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இறுதிப் போட்டியில் ஆடப் போகும் மற்றொரு அணியை நிர்ணயிக்கும் போட்டியாக இன்றைய போட்டி அமைந்துள்ளது.

[ குல்தீப் இப்ப பௌலிங் போடுறியா? இல்ல பௌலரை மாத்தவா? மிரட்டிய தோனி ]

வங்கதேசம் இந்த தொடரில் மிகவும் மோசமாக செயல்பட்டு வந்தாலும், எப்படியோ இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் எப்படி இருந்தது?

பாகிஸ்தான் எப்படி இருந்தது?

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றே ஆக வேண்டும். இந்த தொடர் துவங்கும் முன்பு, "இந்தியாவை விட பாகிஸ்தான் அணி தான் கோப்பை வெல்லும் தகுதி படைத்தது. சொந்த மண் போன்ற ஐக்கிய அரபு நாட்டில் விளையாடுவதால் அந்த அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது" என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறினர்.

பாகிஸ்தான் மீளுமா?

பாகிஸ்தான் மீளுமா?

எனினும், அதற்கு மாறாக, இந்தியாவிடம் இரண்டு முறை தோல்வி அடைந்து, ஆப்கானிஸ்தான் அணியுடன் கடைசி ஓவர் வரை போராடி பெற்ற வெற்றியோடு சோர்வடைந்து உள்ளது அந்த அணி. அதில் இருந்து பாகிஸ்தான் மீளுமா? என்பதே இன்றைய போட்டியின் முக்கிய விஷயமாக இருக்கிறது.

வங்கதேசம் வெல்லுமா?

வங்கதேசம் வெல்லுமா?

வங்கதேச அணியில் பேட்டிங் மிக மோசமாக உள்ளது. அந்த அணியில் ஒன்றிரண்டு வீரர்கள் தான் ரன் அடிக்கிறார்கள். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளிக்கிறார்கள். அந்த அணியின் முக்கிய வீரர் தமிம் இக்பால் காயமடைந்தது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக உள்ளது.

இன்று பரபரப்பான ஆட்டம்

இன்று பரபரப்பான ஆட்டம்

இன்றைய ஆட்டத்தில் வென்றால் இறுதி வாய்ப்பு என்பதால் வங்கதேசம் இன்று தன் கடைசி மூச்சு வரை போராடும் என எதிர்பார்க்கலாம். பாகிஸ்தான் இன்று தோல்வி அடைந்தால் கடும் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, பாகிஸ்தான் வெற்றிக்கு முயற்சி செய்யும். இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Story first published: Wednesday, September 26, 2018, 15:41 [IST]
Other articles published on Sep 26, 2018
English summary
Asia cup 2018 Super 4 last match between Pakistan vs Bangladesh, a virtual semifinal, as this match is the decider of the second team for final.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+