ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி அட்டவணை வெளியீடு..
துபாய் : ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றன.
லீக் சுற்று போட்டிகளின் கடைசி போட்டி இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நடைபெறவிருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே சூப்பர் 4 சுற்று போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் 4 சுற்றில் விளையாட இந்தியா,பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்,இறுதி போட்டியில் விளையாட தகுதி பெறும்.
இந்திய அணி பாகிஸ்தான் அணியை மீண்டும் செப்டம்பர் 23ஆம் தேதி எதிர்கொள்ளவிருக்கிறது. இரண்டு அணிகளும் சூப்பர் 4 சுற்றில் முதல் இடங்களை பிடித்தால் இறுதிப்போட்டியில் மீண்டும் நேருக்கு நேர் விளையாடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறவிருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் அணி தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
அட்டவணைப்படி ஏ பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணி பி பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியுடன் மோத வேண்டும். ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஏ பிரிவில் முதல் இடத்தையும்,பங்களாதேஷ் அணிக்கு இரண்டாவது இடத்தையும் வழங்கியுள்ளது. கடைசி லீக் போட்டியின் முடிவு தெரிவதற்கு முன்பே பங்களாதேஷ் அணிக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக பங்களாதேஷ் அணியின் கேப்டன் மொர்தசா தெரிவித்துள்ளார்.
சூப்பர் 4 போட்டிகள் விவரம் : (அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு துவங்கும்)
செப்டம்பர் 21:
இந்தியா vs பங்களாதேஷ் (துபாய்)
ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் (அபுதாபி)
செப்டம்பர் 23 :
இந்தியா vs பாகிஸ்தான் (துபாய்)
ஆப்கானிஸ்தான் vs பங்களாதேஷ் (அபுதாபி)
செப்டம்பர் 25 :
இந்தியா vs ஆப்கானிஸ்தான் (துபாய்)
செப்டம்பர் 26 :
பாகிஸ்தான் vs பங்களாதேஷ் (அபுதாபி)
செப்டம்பர் 28 :
இறுதிபோட்டி (துபாய்)
முதல் இடம் vs இரண்டாமிடம்
Story first published: Thursday, September 20, 2018, 12:28 [IST]
Other articles published on Sep 20, 2018


Click it and Unblock the Notifications