Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஆசியக் கோப்பையை வென்றது இந்திய அணி" இலங்கையை கதறவிட்ட இளம் சிங்கங்கள்.. வெற்றி பெற்றது எப்படி!

அமீரகம்: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்றுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த இலங்கை மற்றும் இந்திய அணி இன்று இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதியது.

சொதப்பிய இலங்கை

சொதப்பிய இலங்கை

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டாஸ் மட்டுமே அந்த அணிக்கு சாதகமாக சென்ற சூழலில் பேட்டிங் முற்றிலும் சொதப்பியது. அந்த அணியில் ஒரு வீரர் கூட 20 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. வந்த வேகத்தில் வெளியேறினர். அதிகபட்சமாக யாசிரு ரொட்ரிகோ 19 ரன்கள் அடித்தார். இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸ் அதோடு முடித்துக்கொள்ளப்பட்டது.

மழை பாதிப்பு

மழை பாதிப்பு

நீண்ட நேரமாக மழையின் பாதிப்பு இருந்ததால், டக்ளஸ் லூவிஸ் விதிமுறைப்படி 32 ஓவர்களில் 102 ரன்கள் அடிக்க வேண்டும் என இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங்கே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஹர்னூர் சிங் 5 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் பிட்ச் மோசமாக உள்ளதா என அனைவரும் பதற்றமடைந்தனர்.

அசத்தல் பார்ட்னர்ஷிப்

அசத்தல் பார்ட்னர்ஷிப்

ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த அன்க்ரிஸ் ரகுவன்ஷி மற்றும் சாயிக் ரஷீத் ஜோடி நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். பேட்டிங்கை போலவே இலங்கை அணியின் பவுலிங்கும் சற்று சொதப்பலாக இருந்தது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 96 ரன்களை சேர்த்தனர்.

 அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

அவர்களின் பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி 21. 3 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு 104 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரில் 8வது முறையாக பட்டம் வென்று அசத்தியுள்ளது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அங்க்ரிஸ் 56 ரன்களுடனும், சாஹிக் 31 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 31, 2021, 19:02 [IST]
Other articles published on Dec 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+