Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 வருட "கேப்".. ஆசிய கோப்பைத் தொடரின் "பரிதாப" நிலை - ACC முக்கிய அப்டேட்

மும்பை: ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், 2023ல் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

Recommended Video

Asia Cupன் 'பரிதாப' நிலை! ACC முக்கிய Update | OneIndia Tamil

ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தது.

ஆனால், சில அரசியல் காரணங்களுக்காக தொடர் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஆசிய கோப்பை தொடரை இந்தாண்டு ஜூன் மாதம் வரை ஒத்திவைத்தது ஐசிசி.

இலங்கை ஷாக் முடிவு

இலங்கை ஷாக் முடிவு

ஆனால், இலங்கையில் இப்போது கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் ஆசிய கோப்பைத் தொடர் ரத்து செய்யப்படுவதாக இலங்கை அறிவித்தது. இதுகுறித்து பேசிய அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஆஷ்லே டி சில்வா, "கோவிட் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஆசியக் கோப்பை தொடரை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஒருமனதாக இந்த முடிவினை எடுத்துள்ளோம்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கவிருந்தன. அதுமட்டுமின்றி, கொரோனா தொற்று பரவல் குறைந்து நிலைமை சகஜ நிலைமைக்கு திரும்பினால் கூட, 2023ல் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை வரை, ஆசிய கோப்பை தொடரை நடத்த வாய்ப்பில்லை. ஏனெனில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து நாடுகளுக்கான ஷெட்யூல் நிரம்பி வழிகின்றன" என்று கூறினார் . இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடர் 2023ம் ஆண்டு நடத்தப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

வேறு வழியில்லை

வேறு வழியில்லை

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "இந்த விஷயத்தை மிகவும் கவனமாக பரிசீலித்தோம். ஆனால், தொடரை ஒத்திவைப்பதே ஒரே வழி என்று கவுன்சில் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே, 2022 ஆம் ஆண்டில் ஆசிய கோப்பை தொடர் இருப்பதால், இப்போது நடக்க வேண்டிய தொடரை, 2023ல் நடத்துவதே சாத்தியமாகும். அதற்கான தேதிகள் சரியான நேரத்தில் உறுதிப்படுத்தப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3 வருஷமாச்சு

3 வருஷமாச்சு

கடந்த முறை, 2018ஆம் ஆண்டில் ஆசியக் கோப்பை துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை மூன்று விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிப் பெற வைத்த தொடர் தான், இதற்கு முன்பு நடந்த கடைசி ஆசியக் கோப்பை தொடராகும்.

Story first published: Monday, May 24, 2021, 14:04 [IST]
Other articles published on May 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+