Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022ல் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட்... இந்தியா பங்கேற்குமா? மில்லியன் டாலர் கேள்வி

கராச்சி : இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடரை வரும் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ளது.

இந்த ஆண்டு தொடர் கைநழுவிய நிலையில் வரும் 2022ல் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக பிசிபி தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனாவால் தள்ளிவைப்பு

கொரோனாவால் தள்ளிவைப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2020 இந்த ஆண்டு ஆகஸ்ட் -செப்டம்பர் மாதங்களில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடரை நடத்த முடியாமல் தள்ளிப் போன நிலையில், தற்போது அடுத்த ஆண்டு இலங்கையில் நடத்தப்பட உள்ளது.

பாகிஸ்தானில் நடக்கிறது

பாகிஸ்தானில் நடக்கிறது

இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடத்த முடியாத நிலையில் வரும் 2022 ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை தாங்கள் வாங்கியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ வாசிம் கான் தெரிவித்துள்ளார். இந்த தொடர் வரும் ஜூன் மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ளது.

வங்கதேசம், இலங்கை அணிகள் சுற்றுப்பயணம்

வங்கதேசம், இலங்கை அணிகள் சுற்றுப்பயணம்

இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுதது சர்வதேச போட்டிகளை நடத்த முடியாமல் இருந்த பிசிபி கடந்த ஒரு ஆண்டில் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட அணிகளை தங்களது நாட்டில் விளையாட வைத்துள்ளது. மேலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும் அங்கு சென்று விளையாட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியா பங்கேற்குமா?

இந்தியா பங்கேற்குமா?

ஆசிய கோப்பை தொடரை வரும் 2022ல் பாகிஸ்தான் நடத்தவுள்ள நிலையில், அங்கு சென்று இந்தியா விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஆண்டு அந்த தொடர் நடைபெற்றிருந்தாலும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அங்கு சென்று விளையாட தயக்கம் காட்டிய நிலையில், யூஏஇயில் தொடரை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 4, 2020, 18:59 [IST]
Other articles published on Dec 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+