Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாதனை..! 100வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அசத்தல்.. 5 முறை சாம்பியானான இலங்கைக்கு சோகம்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான இலங்கை அணிக்கு ஆப்கானிஸ்தான் அணி வெளுத்து வாங்கியுள்ளது.

Recommended Video

IND vs ZIM இந்திய வீரர் Shubman Gill சதம் அடித்து அசத்தல் *Cricket

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் இலங்கை வென்றுவிடம் என நினைத்த ரசிகர்களுக்கு ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

இலங்கை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய குசேல் மெண்டிஸ் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் நட்சத்திர வீரர் அசலங்கா டக் அவுட் ஆகினர்.

ஏமாற்றிய வீரர்கள்

ஏமாற்றிய வீரர்கள்

தொடக்க வீரர் நிசாங்கா 3 ரன்களில் பெவிலியன் திரும்ப, இலங்கை அணி 5 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஐபிஎல் வீரரான பனுகா ராஜபக்சாவும், குணதிலகாவும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஆப்கான் வீரர் உமர் வீசிய ஒரு ஒவரில் 20 ரன்கள் விளாசியது.ராஜபக்சா 38 ரன்களில் துரதிர்ஷடவசமாக ரன் அவுட் ஆனார்.

தடுமாறிய இலங்கை

தடுமாறிய இலங்கை

குணதிலகா 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி வீரர் ஹசரங்கா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷனகா டக் அவுட் ஆனார். சிஎஸ்கே வீரர் மகீஷ் தீக்சனாவும் பந்தையே சந்திக்காமல் ரன் அவுட் ஆனார். இதே போன்று அறிமுக வீரராக களமிறங்கிய பதிரானாவும் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் இலங்கை அணி டி20 வரலாற்றில் குறைந்த ஸ்கோரை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கை ஆல் அவுட்

இலங்கை ஆல் அவுட்

அந்த கலங்கத்தை கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வீரர்கள் துடைக்க இறுதியில், 105 ரன்களில் இலங்கை சுருண்டது. ஃபருகி 3 விக்கெட்டுகளையும், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை, பந்தவீச்சில் நெருக்கடி தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் ஏமாற்றமே கிடைத்தது.

அபார வெற்றி

அபார வெற்றி

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரஹமனுல்லா குர்பாஸ், ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டினார். 4 சிக்சர் விளாசிய அவர், 18 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். இதனையடுத்து களமிறங்கிய இப்ராஹிம் 15 ரன்களில் ரன் அவுட்டாக, தொடக்க வீரர் ஹசரத்துல்லா ஷசாய் 37 ரன்கள் சேர்க்க, ஆப்கானிஸ்தான் அணி 10.1வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 5 முறை சாம்பியனான இலங்கை அணி வங்கதேசத்தை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

Story first published: Saturday, August 27, 2022, 22:47 [IST]
Other articles published on Aug 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+