For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை: மற்றொரு பாகிஸ்தான் வீரருக்கு காயம்.. இந்திய அணிக்கு பெரும் நிம்மதி.. எப்படி தெரியுமா?

துபாய்: சாஹீன் அஃப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் மற்றொரு நட்சத்திர வீரர் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Asia Cup 2022: Pakistan Team-ன் SWOT Analysis! | Aanee's Appeal | *Cricket

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இதில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் ஆகஸ்ட் 28ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடர்

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க காத்துள்ளது. அதற்கேற்றார் போலவே பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான சாஹீன் அஃப்ரிடி தொடரில் இருந்து வெளியேறினார். டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் டாப் ஆர்டரை சரித்தது சாஹீன் தான். எனவே அவர் காயம் காரணமாக வெளியேறியது இந்திய அணிக்கு நற்செய்தியாக அமைந்தது.

மற்றொரு வீரர் காயம்

மற்றொரு வீரர் காயம்

இந்நிலையில் தற்போது பாகிஸ்தானின் மற்றொரு ஸ்டார் பவுலரும் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாஹீனுக்கு பிறகு அந்த அணி நம்பியிருப்பது 21 வயதாகும் முகமது வசீம் தான். தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அவருக்கு திடீரென முதுகுபகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அட்டகாச ஃபார்ம்

அட்டகாச ஃபார்ம்

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள சூழலில் முகமது வசீம் வேகமாக குணமடைய வேண்டும். இல்லையென்றால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் தற்போது முதன்மை வீரராக வலம் வருபவர் முகமது வசீம். இவர் கடைசியாக விளையாடிய அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4/36 ரன்களை குவித்திருந்தார்.

இந்திய அணி பந்துவீச்சு

இந்திய அணி பந்துவீச்சு

பாகிஸ்தான் அணியை போலவே இந்திய அணியின் பந்துவீச்சும் சற்று பலவீனமாக காணப்படுகிறது. முன்னணி வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினர். இவர்களுக்கு மாற்றாக அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Story first published: Friday, August 26, 2022, 14:29 [IST]
Other articles published on Aug 26, 2022
English summary
India vs pakistan clash in asia cup 2022 ( ஆசிய கோப்பை தொடர் 2022 ) ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் மற்றொரு முன்னணி வீரர் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+