
வங்கதேச அணி
ஆம் சரிதான். இதில் ஆப்கானிஸ்தான் 5 முறையும். வங்கதேசம் 3 முறை மட்டும் தான் வென்று இருக்கிறது. வங்கதேச அணிக்கு சமீப காலமாக எதுவும் சரியாக அமையவில்லை. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வங்கதேச அணி 2க்கு1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனையடுத்து வங்கதேச அணியின் கேப்டன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

திரும்பிய நட்சத்திரம்
வங்கதேச அணி கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இழந்த பெருமையை மீட்கும் வகையில், வங்கதேச அணி ஆசிய கோப்பை தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கில் ஷகிபுல் ஹசன் தலைமையில் பங்கேற்கிறது. எனினும் ஜிம்பாப்வே தொடரில் களமிறங்காத ஷகிபுல் ஹசன், முஸ்பிகுர் ரஹிம் , முகமது நயிம், சபிர் ரஹ்மான்ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

ஆடுகளம்
ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் மிரட்டி வருகிறது. இலங்கை அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளதால் நல்ல உத்வேகத்துடன் உள்ளனர். ஷார்ஜா ஆடுகளம் பொறுத்தவரை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக இருக்கும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

பிளேயிங் லெவன்
ஆப்கானிஸ்தான் - 1, ஹஸ்ரத்துல்லா ஷசாய், 2, குர்பாஷ், 3, இப்ராஹிம் சாட்ரான், 4, கரிம் ஜன்னட், 5, நஜிபுல் சர்தான், 6, முகமது நபி, 7, ஓமர்சாய், 8, ரஷித் கான், 9, நவீன் உல் ஹக், 10, முஜிபுர் ரஹ்மான், 11, ஃபசல் ஃபரூக்கி
வங்கதேசம் 1,முகமது நயிம், 2,அனாமுல் ஹக், 3,ஷகிபுல் ஹசன், 4, அஃபிப் ஹுசைன், 5, முஸ்பிகுர் ரஹிம், 6, முகமுதுல்லா, 7, சபிர் ரஹ்மான், 8.மெஹதி ஹசன். 9,முகமுதுல்லா சபியுதின், 10,நசும் அகமது, 11,முஸ்தபிசுர் ரஹ்மான்


Click it and Unblock the Notifications











