Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கை Vs வங்கதேசம்.. நாக் அவுட் போட்டி.. வார்த்தை போருக்கு நடுவே தொடங்கியது ஆட்டம்

துபாய்: ஆசிய கோப்பை தொடரின் முக்கிய ஆட்டமாக இன்று வங்கதேசம், இலங்கை அணி மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.

Recommended Video

Asia Cup: IND vs HK Match-ன் முக்கிய Highlights | Aanee's Appeal | *Cricket

தோல்வி அடையும் அணி, தொடரை விட்டு வெளியேறிவிடும். இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, இரு அணிகளும் திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும், சமீப காலமாக பெரும்பாலான போட்டிகளில் தோல்வியை தழுவியது.

 Asia cup 2022 – Bangladesh vs srilanka in Virtual knock out game

மேலும் இரு அணிகளும் களத்தில் கொஞ்சம் அதிரடியாக நடந்து கொண்டு ரசிகர்களிடையே திட்டு வாங்கவதிலும் வல்லவர்கள். இந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை கேப்டன் ஷனுகா, ஏதோ அவர்கள் அணியில் மலிங்கா, முரளிதரன், எல்லாம் இன்னும் விளையாடுவது போல் வங்கதேச அணியில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இல்லை என்று கமெண்ட் அடித்தார்.

இதனால் கடுப்பான வங்கதேச அணி பயிற்சியாளர்கள், இலங்கை அணியில் தான் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களும், பேட்ஸ்மேன்களும் இல்லை என்று பதிலடி தந்தார். இதற்கு மலிங்கா, இலங்கை வீரர்கள் தங்களது திறமையை களத்தில் காட்ட வேண்டிய நேரம் வந்தவிட்டதாக கூறினார். இந்த நிலையில் தான் இரு அணி வீரர்களுக்கும் இன்று களத்தில் மோத உள்ளனர்.

இந்த நிலையில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இலங்கை அணியில் மதிஷா பதிரானாவுக்கு பதிலாக அசிதா பெர்னான்டோ களமிறங்குகிறார். இதே போன்று வங்கதேச அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அனாமுல் ஹக், முகமது நயிம் மற்றும் முகமது சயிஃபுதின் ஆகியோர் நீக்கப்பட்டு சபிர் ரஹ்மான், மெஹதி ஹசன் மற்றும் எபதாட் ஹூசைன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, September 1, 2022, 19:47 [IST]
Other articles published on Sep 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+