ஆசிய கோப்பையில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? ஒரே இடத்துக்கு 3 வீரர்கள் போட்டி.. தலைவலியில் ரோகித்
மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Recommended Video
ஒவ்வொரு அணியும் பிளேயிங் லெவனில் எப்படியாவது ஒரு வீரரை நிரப்பிட வேண்டும் என்று மல்லுக்கட்டி வரும் நிலையில், இந்திய அணியோ பிளேயிங் லெவனில் யாரை சேர்ப்பது யாரை விடுவது என்ற குழப்பத்தில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியில் ஆசிய கோப்பை தொடருக்காக நான்கு சுழற் பந்துவீச்சாளர்கக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

யாருக்கு இடம்?
சாஹல், அஸ்வின், ரவி பிஷ்னாய் ஜடேஜா என்ற நான்கு வீரர்கள் தற்போது பிளேயிங் லெவனின் இடம் பிடிப்பதற்காக கடும் போட்டியில் உள்ளனர். ஆசியக் கோப்பை போட்டிகள் துபாயில் நடைபெறுவதால் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமே இருக்கும்.இதனால் ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாஹலா? அஸ்வினா?
பேட்டிங் வலுப்படுத்துவதற்காக எப்படியும் ரவீந்திர ஜடேஜாவை பிளேயிங் லெவனனில் ரோகித் சர்மா சேர்த்து விடுவார்.இந்த நிலையில் இரண்டாவது சுழற் பந்துவீச்சாளர் யார் என்ற குழப்பம் தற்போது ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ளது. சாஹலை வைத்து விளையாடலாமா? இல்லை அஸ்வினை தேர்வு செய்யலாமா என்ற குழப்பம் இந்திய அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

விக்கெட் விழ வாய்ப்பு
லெக் ஸ்பின்னரை அடித்து ஆட முயற்சி செய்யும்போது விக்கெட்டுகள் விழ அதிக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் சாஹல் இல்லாததால் தான் இந்தியா தோற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சாஹல் பிளேயிங் லெவனில் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகும். இதனால் அஸ்வின் இடம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடும் போட்டி
ஒருவேளை ரோகித் சர்மா இரண்டு வேக பந்துவீச்சாளர் மற்றும் ஹர்திக் பாண்டியாவை வைத்து சமாளித்து விடலாம் என்று நினைத்தால், இந்தியாவுக்கு மூன்று சுழற் பந்துவீச்சாளர் வைத்து விளையாட வாய்ப்பு கிடைக்கும். அப்போது அணியில் அஸ்வின் தாராளமாக இடம் பிடிப்பார். ஆனால் ஹர்திக் பாண்டியாவை நம்பி நான்காவது வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்யாமல் ரோகித் சர்மா விடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.இதனால் தற்போது பிளேயிங் லெவனில் ஆவேஷ் கான் இடம் பிடிப்பாரா இல்லை அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா என்ற போட்டி தான் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications