Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக். எதிரான போட்டியில் சிக்கல்.. தினேஷ் கார்த்திக்கிற்கு இடமில்லை.. ரோகித் சர்மாவுக்கு தலை வலி

துபாய் : ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் முக்கிய வீரராக கருதப்படும் தினேஷ் கார்த்திற்கு இடமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Rohit Sharma-வின் Captaincy Records! Asia Cup-ல் வெற்றி உறுதி? | Aanee's Appeal | *Cricket

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் யாரை விடுவது யாரை சேர்ப்பது என்ற குழப்பம் இன்னமும் தீர்ந்தப்பாடு இல்லை.

அதற்கு காரணம், இந்தியாவின் 2 நட்சத்திர வீரர்கள் இல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் அணியை தயார் படுத்தினார்.

டாப் 3 வீரர்கள்

டாப் 3 வீரர்கள்

ஆனால், தற்போது கோலி, ராகுலும் அணிக்கு திரும்பியதால், பிளேயிங் லெவனில் சிலருக்கு இடமிருக்காது. ராகுல் அணியின் துணை கேப்டன் என்பதால், அவரை நீக்கிவிட்டு விளையாட முடியாது. இதனால் ரோகித் சர்மாவுக்கு துணையாக ராகுல் தான் களமிறங்க உள்ளார், இதே போன்று நம்பர் 3 வீரராக விராட் கோலி களமிறங்குவதும் உறுதியாகிவிட்டது.

நடுவரிசை

நடுவரிசை

இவ்விரண்ட வீரர்களையும் நீக்குவத என்பது முடியாத காரியம் ஆகிவிட்டது என்பதால், இனி ம்ற்றவர்கள் இடத்திற்கு தான் ஆபத்து. சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். இதனால் அவரையும் அணியிலிருந்து நீக்க முடியாது. 5வது வீரராக ரிஷப் பண்ட் களமிறங்குவார். அவரது இடமும் கிட்டதட்ட உறுதி தான்.

கார்த்திக்கிற்கு இடமில்லை

கார்த்திக்கிற்கு இடமில்லை

இதே போன்று 6வது வீரராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணியில் விளையாடுவார். அவர் அணியின் முக்கிய வீரர் என்பதால் அவரை நீக்க முடியாது. இதனால் 7வது இடத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கினால், இந்திய அணி ஒரு வேகப்பந்துவீச்சாளர் அல்லது, ஒரு சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் தான் களமிறங்கும். ஆனால், அது பெரிய தலைவலியை தரும்.

ரோகித்துக்கு சிக்கல்

ரோகித்துக்கு சிக்கல்

இதனால் 7வது வீரராக ஆல்ரவுண்டர் ஜடேஜா, 8வது வீரராக புவனேஸ்வர்குமார், 9வது வீரராக ஆர்ஸ்தீப் சிங், 10வது வீரராக ஆவேஷ் கான் மற்றும் 11வது வீரராக சாஹல் களமிறங்கவார்கள். இதனால் தினேஷ் கார்த்திக்கின் இடம் கேள்விகுறி தான். ஒரு வேலை ஹ்ர்திக் பாண்டியா நான்கு ஒவரையும் முழுமையாக வீசுவார் என்றால், ஆவேஷ் கானை நீக்கிவிட்டு தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கலாம். ஆனால் அது பந்துவீச்சை பலவீனமாக்கிவிடும். இதனால், ஆவேஷ் இல்லை என்றாலும் அந்த இடத்திற்கு ரவி பிஸ்னாய் அல்லது அஸ்வின் தான் களமிறங்குவார்.

Story first published: Saturday, August 27, 2022, 18:33 [IST]
Other articles published on Aug 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+