Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆப்கானுக்கு ஆதரவளிக்கும் இந்திய ரசிகர்கள்.. ஆரம்பமே காத்திருக்கும் அதிர்ச்சி..சமாளிப்பாரா முகமது நபி

ஷார்ஜா: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று மிக முக்கியமான ஆட்டம் நடைபெறுகிறது. இதில் வாழ்வா சாவா கட்டத்தில் உள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இலங்கை அணி 2 போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. தற்போது 2வதாக தகுதி பெறும் அணி எது என்பது தற்போது தீர்மானிக்கப்படும்.

இதில் ஒரு வேலை பாகிஸ்தான் தோல்வியை தழுவினால், இந்தியா தொடரை விட்டு சென்றுவிடும். இதனால் இந்திய ரசிகர்களுக்கு இன்று ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

டாஸ்

டாஸ்

பரபரப்பான இந்த ஆட்டத்தில், ஆரம்பமே இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இந்த ஆடுகளத்திலும் சேஸிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இது குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும். இதனை கருத்தில் கொண்டே நாங்கள் முதலில் பந்துவீசுகிறோம்.

பாபர் அசாம் நம்பிக்கை

பாபர் அசாம் நம்பிக்கை

ஆப்கானிஸ்தான் பேட்டிங்கில் முக்கிய விக்கெட்டுகளை தொடக்கத்தில் வீழ்த்தி நெருக்கடி அளிப்போம் என்று நம்புகிறேன். எங்கள் அணியின் சூழல் அமைதியாக சிறப்பான மனநிலையில் உள்ளோம். வெற்றி எப்போதுமே உங்களுக்கு நம்பிக்கையை தரும். இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அதே அணியே இன்றும் களமிறங்குகிறது என்று பாபர் அசாம் கூறினார்.

ஆப்கானுக்கு நெருக்கடி

ஆப்கானுக்கு நெருக்கடி

இதனை தொடர்ந்து பேசிய முகமது நபி, நாங்களும் முதலில் பந்துவீச தான் இருந்தோம். பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் பந்துவீச கடும் சிரமமாக இருக்கும். ஆனால் இது எல்லாம் போட்டியின் ஒரு பகுதி தான். பேட்டிங் செய்யும் போது அதிரடியாக விளையாடி பெரிய இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயம் செய்வோம். பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த காலத்தில் நன்றாக விளையாடி இருக்கிறோம்.

அணியில் மாற்றம்

அணியில் மாற்றம்

ஆனால் எப்போதுமே அவர்களுடன் விளையாடுவது சவாலானது தான். கடந்த போட்டியில் செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க முயற்சிப்போம். எங்கள் அணியின் இன்று இரண்டு மாற்றங்கள் செய்துள்ளோம். ஃபரித் மாலிக் மற்றும் அசமுத்துல்லா ஆகியோர் இன்று விளையாடுகின்றுனர். இன்றைய ஆட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தால் மட்டுமே ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அமையும்.

Story first published: Wednesday, September 7, 2022, 19:36 [IST]
Other articles published on Sep 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+