Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த முறையும் அதே பிரச்சினையா??.. இந்தியா - பாகிஸ்தான் பிட்ச் ரிப்போர்ட்.. சமாளிப்பாரா ரோகித் சர்மா!

துபாய்: ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.

Recommended Video

Asia Cup 2022 | Corana-ல் இருந்து மீண்டு வந்த Rahul Dravid: இந்திய அணியுடன் இணைய வாய்ப்பு

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இதற்காக இரு அணி வீரர்களும் கடைசி நேர பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை

இரு அணிகளும் கடைசியாக மோதிய டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் பதிலடி கொடுக்க காத்துள்ளது. இதுவும் இதே துபாய் மைதானத்தில் தான். இதே போல இந்திய அணியை ஆசிய கோப்பையிலும் வீழ்த்தி காட்ட பாகிஸ்தான் அணி தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்துள்ளது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்நிலையில் இந்த போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தின் பிட்ச், பந்துவீச்சாளர்களுக்கு நன்கு உதவக்கூடிய ஒன்றாகும். ஆட்டத்தின் முதல் சில ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், மிடில் ஓவரில் இருந்து முழுக்க முழுக்க சுழற்பந்துவீச்சாளர்களுக்கு தான் உதவும். எனினும் இது முதலில் பந்துவீசும் அணிக்கு மட்டுமே ஆகும்.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

இந்த மைதானத்தில் டாஸ் வென்று சேஸிங் செய்த அணியே 80% வெற்றி கண்டுள்ளது. கடைசியாக நடந்த 5 போட்டிகளிலும் முதலில் பவுலிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. ஏனென்றால் ஆட்டத்தின் முதல் பாதியில் பந்து நன்கு பவுன்ஸ் ஆகும் என்பதால் பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். ஆனால் 2வது பாதியில் இருக்காது. ஒருவேளை முதலில் பேட்டிங் செய்யும் அணி 170+ ரன்கள் அடித்துவிட்டால் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

டாஸ் முக்கியம்

டாஸ் முக்கியம்

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடந்த முறை இங்கு மோதிய போது பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று பந்துவீச்சை தான் தேர்வு செய்தது. அப்போது இந்திய அணி 151 ரன்களை மட்டுமே அடிக்க, பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்களை இலக்கை எட்டி வெற்றி கண்டது. எனவே இந்த முறை டாஸ் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

Story first published: Sunday, August 28, 2022, 15:37 [IST]
Other articles published on Aug 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+