For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு குட்பை தான் போல.. எளிய இலக்கை நிர்ணயித்த ஆப்கான்.. இறுதிப் போட்டிக்கு செல்லும் பாக்

ஷார்ஜா: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் வாழ்வா சாவா கட்டத்தில் உள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை எதிர்கொண்டது. .

இதில் ஒரு வேலை பாகிஸ்தான் தோல்வியை தழுவினால், இந்தியா தொடரை விட்டு சென்றுவிடும். இதனால் இந்திய ரசிகர்களுக்கு இன்று ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில்,. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்தது.

Asia cup 2022 – Easy Target for Pakistan as India on the verge of knock out

இந்த ஆடுகளத்திலும் சேஸிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இதனால் பெரிய இலக்கை நிர்ணயிக்கும் உத்வேகத்துடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் ஹசரத்துல்லா மற்றும் ரஹமனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருப்பினும் 3.5 வது ஓவரில் ஆப்கானிஸ்தான் 36 ரன்கள் எடுத்த நிலையில், முதல் விக்கெட்டை இழந்தது.

Asia cup 2022 – Easy Target for Pakistan as India on the verge of knock out

குர்பாஷ் 17 ரன்களில் ஆட்டமிழக்க, ஹசரத்துலா 21 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கரிம் மற்றும் இப்ராஹிம் ஷாட்ரன் நிதானமாக விளையாடி 37 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் 91 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்த போது அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி சரிவை நோக்கி சென்றது.

நஜிபுல்லா 10 ரன்களிலும், கரிம் 13 ரன்களிலும் வெளியேற கேப்டன் முகமது நபி டக் அவுட் ஆனார். இறுதியில் உமர்சாய் 10 ரன்களும், ரஷித் கான் 18 ரன்களும் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகள் வீழ்த்த, மற்ற அனைவரும் 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Story first published: Wednesday, September 7, 2022, 21:36 [IST]
Other articles published on Sep 7, 2022
English summary
Asia cup 2022 – Easy Target for Pakistan as India on the verge of knock out இந்தியாவுக்கு குட்பை தான் போல.. எளிய இலக்கை நிர்ணயித்த ஆப்கான்.. இறுதிப் போட்டிக்கு செல்லும் பாக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+