இப்படியா அவரை ஒப்பிடுவது.. விராட் கோலி குறித்து பாக். சீனியர் சர்ச்சை கருத்து.. கொந்தளித்த ரசிகர்கள்
துபாய்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லதிஃப் பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 2 வெற்றிகளை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதனையெல்லாம் விட இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது தான் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

விராட் கோலி பேட்டிங்
ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை வைத்துள்ள கோலி, இந்த முறையும் அதனை தக்கவைத்து வருகிறார். ஆனால் அவரின் பழைய அதிரடிகள் காணப்படவில்லை. பாகிஸ்தான் போட்டியில் 34 பந்துகளில் 35 ரன்களும், ஹாங்காங் போட்டியில் 44 பந்துகளில் 59 ரன்களும் அடித்திருந்தார். எனவே இன்னும் அவர் சிறப்பாக விளையாட ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பாக். சீனியர் தாக்கு
இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லதிஃப் சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். அதில், சூர்யகுமாரின் 68 (26) ரன்கள் கோலியின் ஆட்டத்தை மறைத்துவிட்டது. விராட் கோலி என்னதான் முயன்றாலும், அவரால் சூர்யகுமார், ரோகித் சர்மா ஆகியோர் போன்று இனி ஆடவே முடியாது. பந்துகளை சாப்பிட்டுவிட்டு, ரன் அடிக்காமல் தவறுகிறார்.

தோனிதான் உதாரணம்
தோனி நிறைய டாட் பால்களை விளையாடினாலும், கடைசியில் 5 - 6 சிக்ஸர்களை அடித்து அதனை சரி செய்துவிடுவார். ரோகித் சர்மா பவர் ப்ளேவில் முடிந்தவரை ரன் வேண்டும் என அதிரடி காட்டுவார். பின்பு மெதுவாக ஆடினாலும் கடைசி வரை இருப்பார். ஆனால் விராட் கோலி மட்டும் அதனை செய்வதே கிடையாது. 30 - 35 ரன்கள் அடித்த பிறகு பெரிய ஷாட்களுக்கு செல்கிறார். ஆனால் அதுவும் சரிவர செயல்படுவது கிடையாது.

ஐபிஎல்-ல் எதிரொலி
இதே போன்ற ஆட்டத்தை தான் விராட் கோலி ஆர்சிபி அணிக்காகவும் ஆடுகிறார். இதனால் தான் ஒருமுறை கூட ஆர்சிபி அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்லவே முடியவில்லை. இனியும் கோலி அப்படியே விளையாடினாலும் அதில் எந்தவித பலனும் இருக்காது என்பது போன்று முகமது ஹஃபீஸ் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications