Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் ஒருவரே காரணம்.. சதமடித்த பிறகு விராட் கோலி பேசிய விஷயம்.. நெகிழ்ச்சியில் கண் கலங்கும் ரசிகர்கள்

துபாய்: பிரமாண்ட சதத்திற்கு பிறகு விராட் கோலி கூறிய விஷயம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

IND vs AFG போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி அதிரடி பேட்டிங் மூலம் 20 ஓவர்களில் 121 ரன்களை குவித்தது.

கோலியின் அதிரடி

கோலியின் அதிரடி

இந்திய அணியின் இமாலய இலக்கிற்கு முக்கிய காரணம் விராட் கோலி தான். ரோகித் சர்மா இல்லாததால், ஓப்பனிங் வீரராக களமிறங்கிய விராட் கோலி வானவேடிக்கை காட்டினார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய கோலி 53 பந்துகளில் தனது 71வது சதத்தை பூர்த்தி செய்தார். டி20 கிரிக்கெட்டில் கோலியின் முதல் சதம் இதுவாகும்.

71வது சதம்

71வது சதம்

கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்த விராட் கோலி சுமார் 1020 நாட்களுக்கு பிறகு இன்று சதமடித்தார். மொத்தமாக 61 பந்துகளை சந்தித்த அவர், 6 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 122 ரன்களை குவித்தார். இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.

கோலி விளக்கம்

கோலி விளக்கம்

இந்நிலையில் தனது சதத்திற்கு காரணமாக விராட் கோலி கூறிய விஷயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் இன்னிங்ஸிற்கு பிறகு பேசிய அவர், நீங்கள் என்னை இவ்வளவு சிறப்பான ஆட்டத்துடன் பார்க்கிறீர்கள். ஆனால் நான் இங்கு நிற்பதற்கு மிக முக்கியமாக இருந்தது ஒரே ஒரு நபர் தான். அது எனது மனைவி அனுஷ்கா தான்.

 குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

மோசமான ஃபார்ம் என எனக்கு வந்த அனைத்து கடினமான சூழல்களிலும் துணை நின்றது அனுஷ்கா சர்மா தான். எனவே இந்த சதத்தை எனது மனைவி மற்றும் மகளுக்காக ஸ்பெஷலாக அர்பணிக்கிறேன் எனக்கூறினார். இதனை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Story first published: Thursday, September 8, 2022, 22:22 [IST]
Other articles published on Sep 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+