“அவரால ஒன்னுமே செய்ய முடியாது.. தூக்கிடுங்க”.. பாகிஸ்தானுடனான போட்டி.. கே.எல்.ராகுலுக்கு எதிர்ப்பு!
துபாய்: ரிஷப் பண்ட்-க்கு அணியில் வாய்ப்பு கொடுப்பதற்காக இந்திய அணியில் 2 சீனியர் வீரர்களை கழட்டிவிட முன்னாள் வீரர் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
Recommended Video
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் போட்டி
இந்திய அணி அடுத்ததாக வரும் செப்டம்பர் 4ம் தேதியன்று மீண்டும் பாகிஸ்தான் அணியை சூப்பர் 4 சுற்றில் எதிர்கொள்ளவுள்ளது. கடந்த முறை அடைந்த தோல்விக்கு பழிவாங்க பாகிஸ்தான் அணியும், வெற்றியை தக்கவைக்க இந்திய அணியும் முனைப்பு காட்டி வருகின்றன. எனவே இந்த முறை இந்திய ப்ளேயிங் 11ல் முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்ட்-ன் வருகை
குறிப்பாக இளம் வீரர் ரிஷப் பண்ட் அணிக்குள் வருவார் என தெரிகிறது. முதல் போடியில் தினேஷ் கார்த்திக்கிற்காக உட்காரவைக்கப்பட்ட ரிஷப் பண்ட், ஹாங்காங் போட்டியில் சேர்க்கப்பட்டார். ஆனால் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் அடுத்து வரவுள்ள போட்டியில் இடதுகை பேட்ஸ்மேனாக அவர் நிச்சயம் தேவைப்படுவார் என வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

ருத்ர பிரதாப் கருத்து
இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ருத்ர பிரதாப் சிங் வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார். அதில், ரிஷப் பண்ட் ஒரு சிறந்த வீரர். பண்ட் சிறப்பாக விளையாடினால் இந்தியாவை வெற்றிக்கு அழைத்து செல்வார். எனவே அவருக்காக தினேஷ் கார்த்திக் அல்லது கே.எல்.ராகுல் ஆகிய இருவரில் யாரோ ஒருவர் நீக்கப்பட வேண்டும் எனக்கூறியுள்ளார்.

ராகுலை நீக்கலாம்
குறிப்பாக கே.எல்.ராகுல் நீக்கப்படலாம். கே.எல்.ராகுலின் உடற்மொழியை பார்த்தால் அவரால் ஒன்றுமே செய்ய முடியாததை போன்று தோன்றுகிறது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ராகுலுக்கு இன்னும் சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. ஏனென்றால் கள சூழல்கள் மற்றும் பந்தை புரிந்துக்கொள்வதில் சற்று பதறுவது போன்று தெரிகிறது. எனவே அவரை நீக்கிவிடலாம் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications