“இனி அவரை தடுப்பது சாத்தியமே இல்லை”.. விராட் கோலியின் ஃபார்ம்.. பாக். முன்னாள் வீரர் எச்சரிக்கை!
துபாய்: விராட் கோலியை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.
Recommended Video
நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக துபாயில் நடைபெற்று வருகிறது.
இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளை வீழ்த்தி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

விராட் கோலி ஃபார்ம்
இந்திய அணியின் பலத்திற்கு தற்போது முக்கிய காரணமாக இருப்பவர் விராட் கோலி தான். ஃபார்ம் அவுட்டில் இருந்த விராட் கோலி, 34 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார். ஒரு ரன் கூட அடிக்காத நிலையில் கேட்ச்சில் இருந்த தப்பிய அவர், சிரமப்பட்டு 35 ரன்களை அடித்தார் என விமர்சனங்கள் இருந்தது. எனினும் ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் அட்டகாசமான அரைசதம் விளாசினார்.

அட்டகாச பேட்டிங்
எந்தவித பதற்றமும் இன்றி பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி, 43 பந்துகளில் 59 ரன்களை அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அதுவும் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 134.09 என மிகச்சிறப்பாக இருந்தது. இதனால் அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார் என ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

பாக். சீனியரின் கருத்து
இந்நிலையில் கோலி குறித்து பாக். முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா பேசியுள்ளார். அதில், விராட் கோலி மீண்டும் சிறப்பான பேட்டிங்கிற்கு வந்துள்ளார். எதிரணி பவுலர்கள் தனக்கு அழுத்தம் கொடுப்பதற்கு துளியும் இடம் கொடுக்காமல் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

இனி நிறுத்த முடியாது
கோலியின் இந்த அட்டம், எதிரணி வீரர்களுக்கு ஆபத்தான அறிகுறியாக தோன்றுகிறது. மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்துள்ள விராட் கோலியை இனி யாராலும், தடுத்து நிறுத்துவது மிகவும் சாத்தியமற்ற ஒன்று என நினைக்கிறேன். மேலும் விராட் கோலியை சமாளிப்பதற்கு மற்ற அணிகள் தயாராகிக்கொள்ளுமாறு எச்சரிக்கையையும் அவர் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications