
ஆசிய கோப்பை தொடர்
இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெற்ற போதும், இந்தியா விளையாடும் மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சந்தேகம் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணியுடனான 2 போட்டிகளையும் துபாயில் தான் இந்தியா விளையாடியது. இதே போல சூப்பர் 4 சுற்றில் நடைபெறும் போட்டிகளும் துபாய் சர்வதேச மைதானத்தில் தான் நடைபெறவுள்ளது. ஆனால் மற்ற அனைத்து அணிகளும் சார்ஜா, அபுதாபி மைதானங்களில் விளையாடுகின்றன.

சிகந்தரின் குற்றச்சாட்டு
இந்நிலையில் இந்தியாவுக்கு ஏன் துபாயில் மட்டும் போட்டி நடக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சிகந்தர் பாக்ட் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணி ஏன் துபாயில் மட்டும் விளையாடுகிறது? சார்ஜா அல்லது அபுதாபி மைதானங்களில் விளையாடுவதற்கு பயப்பட என்ன காரணம்? இந்தியா - பாகிஸ்தான் போட்டி முதலில் சார்ஜாவில் தான் நடைபெறவிருந்தது. ஆனால் பின்னர் மாற்றப்பட்டது.

ரசிகர்கள் கொந்தளிப்பு
பாகிஸ்தானில் உள்ள ரசிகர்கள் அனைவரும், " இந்திய அணிக்கு சார்ஜாவில் மோசமான ரெக்கார்ட்கள் உள்ளன. எனவே அங்கு விளையாடுவதற்கு பயந்து தான் மாற்றங்களை செய்துள்ளது" என கூறி வருகின்றனர். இதுகுறித்து நீங்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு குற்றச்சாட்டு
இது ஒருபுறம் இருக்க, இதே போன்ற சர்ச்சை கருத்தை பாகிஸ்தானின் முன்னாள் வீரர் முகமது ஹஃபீஸும் கேட்டிருந்தார். அதில், " ஐசிசி-க்கு இந்திய கிரிக்கெட் கவுன்சில் தான் அதிக வருமானம் கொடுத்து வருகிறது. எனவே பிசிசிஐ-க்கு சாதகமாக ஐசிசி நடந்துக்கொள்வதாகவும், இதனால் தான் இந்திய அணி வெற்றி பெறுகிறது எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











