Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கோலியை 3வது இடத்துல இருந்து தூக்குங்க”.. கம்பீர் திடீரென கூறிய ஐடியா.. இந்த காரணமும் நல்லா இருக்கே!

துபாய்: இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இனி விராட் கோலியை 3வது இடத்தில் இருந்து நீக்க வேண்டும் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

Recommended Video

Asia Cup 2022: Suryakumar-க்கு Kohli செய்த Gesture | Aanee's Appeal

இந்திய அணி தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்திய அணியின் வெற்றியை தாண்டி விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது தான் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலி பேட்டிங்

விராட் கோலி பேட்டிங்

பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் 34 பந்துகளில் 35 ரன்களை அடித்து துரதிஷ்டவசமாக அவுட்டான விராட் கோலி, ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் 44 பந்துகளில் 59 ரன்களும் அடித்து மேலும் ஒரு படி சென்றார். எனினும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் தான் சற்று குறைவாக உள்ளது என ரசிகர்கள் கவலையாகவே உள்ளனர்.

கம்பீர் கருத்து

கம்பீர் கருத்து

இந்நிலையில் கோலியை 3வது இடத்தில் இருந்து நீக்க கம்பீர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியில் தற்போது மிகச்சிறப்பான ஃபார்மில் இருப்பவர் சூர்யகுமார் யாதவ் தான். எனவே விராட் கோலியை 3வது இடத்தில் இருந்து நீக்கிவிட்டு, சூர்யகுமாரை இனி அங்கு களமிறக்க வேண்டும். இதனால் இன்னும் சிறப்பாக செயல்படுவார். இதற்கு சில முக்கிய காரணங்களும் உள்ளன.

என்ன காரணம்

என்ன காரணம்

விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக நல்ல பார்மில் இருக்கும் ஒருவரை நீங்கள் பின்தள்ள கூடாது. சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மிக அபாரமாக செயல்பட்டிருந்தார். சூர்யகுமார் யாதவ் 30 வயதை தொட்டுள்ளதால் அவருக்கு இன்னும் நிறைய காலம் கிடையாது. எனவே அவரை அதற்குள்ளாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கோலிக்கும் நல்லது

கோலிக்கும் நல்லது

சூர்யகுமார் யாதவ் தற்போது தான் சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறார். அவரின் ஆர்வத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விராட் கோலி நிறைய அனுபவம் கொண்டவர். அவர் 4வது இடத்தில் களமிறங்கினால் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுவார். எனவே டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இதனை யோசிக்க வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார்.

Story first published: Saturday, September 3, 2022, 15:35 [IST]
Other articles published on Sep 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+