Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நீங்கள் ஒன்றும் சிறுபிள்ளை கிடையாது”.. பாக்.போட்டியில் விராட் கோலியின் ஆட்டம்.. கம்பீர் விளாசல்!

துபாய்: பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் விராட் கோலி சொதப்பியது குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாக விளாசியுள்ளார்.

Recommended Video

Virat Kohli Emotional Moment | 'Dhoni உடன் அந்த தருணம்!' | Kohli Heart To Heart Interview *Cricket

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அசத்தியது.

இந்தியா வெற்றி பெற்ற போதும், நன்றாக விளையாடிக்கொண்டிருந்த விராட் கோலி மீண்டும் சொதப்பியது ரசிகர்களுக்கு வருத்தமானது.

இந்திய அணியின் பேட்டிங்

இந்திய அணியின் பேட்டிங்

34 பந்துகளில் 35 ரன்களை அடித்து சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி, முகமது நவாஸ் வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் ஆகி அவுட்டானார். அந்த போட்டியில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் மீண்டும் ஏமாற்றி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில் முன்னாள் வீரர் கம்பீரும் கோலி மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கம்பீர் அதிருப்தி

கம்பீர் அதிருப்தி

இதுகுறித்து பேசிய அவர், நான் விராட் கோலி விக்கெட் ஆன விதத்தை பார்த்து கடுப்பில் உள்ளேன். ஏற்கனவே கே.எல் ராகுல் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்த பிறகு ரோகித்தும் ஒரு முக்கிய கட்டத்தில் ஆட்டமிருந்து வெளியேறி விட்டார். அந்த நேரத்தில் அனுபவ வீரரான கோலி களத்தில் நின்று விளையாட வேண்டியது அவசியம். ஆனால் தேவையில்லாத ஒரு ஷாட்டை விளையாடி வெளியேறினார்.

யோசித்திருக்க வேண்டும்

யோசித்திருக்க வேண்டும்

கோலி, நீங்கள் ஒன்றும் அனுபவம் இல்லாத இளம் வீரர் கிடையாது. இதுபோன்று மோசமான ஷாட்களை விளையாடுவது தவறு. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அனுபவமுள்ள நீங்கள் அந்த ஷாட்டை அந்த சமயத்தில் முயற்சித்திருக்கவே கூடாது. கேப்டன் ரோகித் சர்மா அவுட்டான சூழலில் ஒரு சீனியர் வீரராக மறுமுணையில் நின்று வெற்றி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் சொதப்பியுள்ளீர்கள் என கம்பீர் கூறியுள்ளார்.

ரசிகர்களின் நம்பிக்கை

ரசிகர்களின் நம்பிக்கை

விராட் கோலி மீது விமர்சனங்கள் வந்தாலும், அவர் விளையாடிய விதம் ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஏனென்றால் எந்தவித பதற்றமும், அழுத்தமும் இன்றி புத்துணர்ச்சியுடன் விளையாடினார். எனவே அடுத்து வரும் ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, August 30, 2022, 19:15 [IST]
Other articles published on Aug 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+