Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே போட்டியில் இப்படியா?.. தோனி, யுவ்ராஜ் சிங் சாதனையை தகர்த்தெறிந்த ஹர்திக் பாண்ட்யா.. முழு விவரம்

துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஹர்திக் பாண்ட்யா முக்கிய சாதனைகளை தகர்த்து அசத்தியுள்ளார்.

Recommended Video

India vs Pakistan ஆட்டத்தின் Highlights! Pandya முதல் Bhuvaneshwar வரை

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

 பாண்ட்யாவின் மிரட்டல்

பாண்ட்யாவின் மிரட்டல்

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஹர்திக் பாண்ட்யாவின் கடைசி நேர அதிரடி தான். கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்த போது, அசால்ட்டாக சிக்ஸரை விளாசி வெற்றியை தேடி கொடுத்தார். மொத்தமாக 17 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 ரன்களை குவித்தார். பந்துவீச்சிலும் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

புதிய சாதனைகள்

புதிய சாதனைகள்

இந்நிலையில் இந்த ஆட்டத்தின் மூலம் முக்கிய சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒரே போட்டியில் 30 + ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற யுவ்ராஜ் சிங்கின் சாதனையை தகர்த்து முதலிடம் பிடித்தார். யுவ்ராஜ் சிங் 2 முறை இதனை செய்திருந்த சூழலில் ஹர்திக் பாண்ட்யா 3 முறை செய்திருந்தார்.

தோனி சாதனை தகர்ப்பு

தோனி சாதனை தகர்ப்பு

இதே போல தோனியின் சாதனையும் தகர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 16 - 20 ஓவர்களில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் தோனி முதலிடத்தில் இருந்தார். ஆனால் நேற்று பாண்ட்யா அதனை முறியடித்தார். ஹர்திக் பாண்ட்யா 34 சிக்ஸர்களும், தோனி 34 சிக்ஸர்களையும் விளாசியுள்ளனர்.

தோனியின் செயல்பாடு

தோனியின் செயல்பாடு

தோனியின் சாதனை மட்டுமின்றி, தோனியை போன்றே பாண்ட்யாவின் செயல்பாடுகள் இருப்பது ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது. மிகவும் அழுத்தமான சூழல்கள் உருவான போதும், பாண்ட்யா எந்தவித பதற்றமும் இன்றி நிதானமாக விளையாடினார். இதே போல கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் சிங்கிள் அடிக்க வா என்று அழைத்த போதும், அதனை மறுத்து நான் இருக்கிறேன், பார்த்துக்கொள்கிறேன் என பொறுப்பை ஏற்றுக்கொண்டு விளையாடியதும் தோனியை பார்த்தது போன்றே இருந்தது.

Story first published: Monday, August 29, 2022, 16:44 [IST]
Other articles published on Aug 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+