அந்த 2 பேர எனக்கு நல்லா தெரியும்.. பாகிஸ்தானை பந்தாடியது எப்படி??.. ஹர்திக் பாண்ட்யா ஓபன் டாக்!
துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்றுக்கொடுத்தது குறித்து ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் பின்னர் ஆடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது.

ஹர்திக்கின் செயல்பாடு
இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஹர்திக் பாண்ட்யா. குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய போதும், இந்திய அணியின் டாப் ஆர்டர் சொதப்பியது. 89 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா - ஜடேஜா ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை காப்பாற்றினர்.

கடைசி நேர சிக்ஸ்
கடைசி ஓவரில் இந்தியாவுக்கு 7 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்த நிலையில் முதல் பந்திலேயே ஜடேஜா அவுட்டானார். 2வது பந்து சிங்கிளாக, 3வது பந்து டாட் பாலானது. இதனால் 3 பந்துகளில் 6 ரன்களை அடித்துவிடுவார்களா என ரசிகர்கள் நகம் கடிக்க பார்த்துக்கொண்டிருந்தனர். எனினும் எந்தவித பதற்றமும் இல்லாமல் இருந்த பாண்ட்யா, அசத்தலான சிக்ஸரை விளாசி வெற்றி பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சிலும் அவர் 3 விக்கெட்களை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவுலிங் திட்டம்
இந்நிலையில் தனது பேட்டிங் குறித்து பாண்ட்யா மனம் திறந்துள்ளார். அதில், பந்துவீச்சை பொறுத்தவரையில் சூழலுக்கு ஏற்ப செயல்படுவது முக்கியம். அதே போல நமது ஆயுதத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். எனக்கு ஷார்ட் பந்துகள் தான் பலம். அதனை சரியான நேரத்தில், பேட்ஸ்மேன்கள் தவறு செய்யும் நேரத்தில் போட்டு விக்கெட் எடுத்தேன்.

பேட்டிங் ப்ளான்
பேட்டிங்கை பொறுத்தவரையில் இது போன்ற நேரங்களில் ஒவ்வொரு ஓவரிலும் திட்டம் போட வேண்டும். பாகிஸ்தான் அணியில் ஒரு இடதுகை ஸ்பின்னர் மற்றும் இளம் பவுலர் இருக்கிறார் என்பதை நான் அறிந்தேன். அதனால் பொறுமை காத்தேன். கடைசி ஓவரில் 7 ரன்கள் தான் தேவைப்பட்டது. ஆனால் 15 ரன்கள் தேவை என இருந்திருந்தாலும், நான் அடித்திருப்பேன். ஏனென்றால் 20 ஓவரில் என்னை விட எதிரணி பவுலர் தான் அழுத்தத்தில் இருப்பார் என எனக்கு தெரியும் என கூறினார்.


Click it and Unblock the Notifications