
பாகிஸ்தான் போட்டி
குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய போதும் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சற்று திணறினர். ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா (12), துணை கேப்டன் கே.எல்.ராகுல் (0) என அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதன் பின்னர் வந்த விராட் கோலி 35 ரன்கள் அடித்து ஓரளவிற்கு அணியை மீட்டார். நம்பிக்கை நாயகனாக இருந்த சூர்யகுமார் யாதவ் 18 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் 14 ஓவர்களில் 89 ரன்களை மட்டுமே எடுத்து இந்தியா திணறியது.

சிறப்பான பார்ட்னர்ஷிப்
எனினும் இதன்பின் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா - ஹர்திக் பாண்ட்யா ஜோடி சீரான வேகத்தில் ரன் குவித்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜடேஜா 29 பந்துகளில் 35 ரன்களும், ஹர்த்திக் பாண்ட்யா 17 பந்துகளில் 33 ரன்களையும் குவிக்க, இந்திய அணி 19.4 ஓவர்களில் அட்டகாச வெற்றியை பெற்றது.
சுவாரஸ்யமான வீடியோ
இந்நிலையில் இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா செய்த விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெற 7 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. நல்ல ஃபார்மில் இருந்த ஜடேஜா முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். 2வது பந்தை தினேஷ் கார்த்திக் சிங்கிள் அடிக்க, ஹர்திக் பாண்ட்யா ஸ்ட்ரைக்கிற்கு வந்தார்.

பாண்ட்யாவின் உடல்மொழி
3வது பந்தை ஹர்திக் பாண்ட்யா ஓங்கி அடித்த போதும், அதனை ஃபீல்டர் தடுத்து நிறுத்திவிட்டார். எனினும் அந்த ரன்னை தவறவிடக்கூடாது என்பதற்காக தினேஷ் கார்த்திக் ரன் எடுக்க அழைத்தார். ஆனால் பாண்ட்யா அதனை மறுத்துவிட்டு, "நான் இருக்கிறேன்.. பாத்துக்கிறேன் கவலைபடாதே" என செய்கை செய்தார். இதனால் கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் என பரபரப்பு கட்டத்தை எட்டியது.

கடைசி நேர சிக்ஸர்
இந்தியா வெற்றி பெற்றுவிடுமா என்ற பதற்றத்தில் இந்திய ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் அதற்கு அடுத்த பந்திலேயே அட்டகாசமான சிக்ஸரை விளாசி ஹர்திக் பாண்ட்யா வெற்றி பெற்று கொடுத்தார். பாண்ட்யாவின் இந்த செயல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











