Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புறக்கணித்த ஐபிஎல் அணிகள்..தோனியை விட பெஸ்ட்.. 6 சிக்சர் விளாசிய ஆப்கான் வீரர்..யார் இந்த நஜிபுல்லா?

ஷார்ஜா:ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 6 சிக்சர் விளாசி அசத்தி இருக்கிறார் ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லா ஷார்டன்.

Recommended Video

Asia Cup 2022: புறக்கணித்த IPL Teams! Afghanistan-ன் Hero ஆகிய Najibullah Zadran | Aanee's Appeal

ஷார்ஜா மைதானம் அளவில் சிறியதாக இருந்தாலும், ஆடுகளம் மிகவும் தொய்வாக இருந்தது. பந்து பேட்டிற்கு வரவே இல்லை.

இதனால், அந்த ஆடுகளத்தில் ரன் குவிப்பதே கடினமான விசயமாக இருந்தது. வங்கதேசம் நிர்ணயித்த 128 ரன்கள் என்ற இலக்கை தொட முடியாமல் ஆப்கானிஸ்தான் திணறியது.

கடினமான சூழல்

கடினமான சூழல்

14 ஓவரில் ஆப்கானிஸ்தான் 65 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி 6 ஓவரில் வெற்றிக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. ஷார்ஜா போன்ற ஆடுகளத்தில் இப்படி ஒரு இலக்கை தொடுவது என்பது இயலாத காரியம். இதனால் வங்கதேச வீரர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தனர். ஆனால் அந்த நிம்மதி கொஞ்சம் நேரம் கூட நிலைக்கவில்லை.

உலகின் ஒரே வீரர்

உலகின் ஒரே வீரர்

காரணம், நஜிபுல்லா என்ற வீரர் 17 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதில் ஹாட்ரிக் சிக்சர் உள்பட மொத்தம் 6 சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும் இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது. இதனை நஜிபுல்லா முதல் மறையாக செய்யவில்லை. டி20 கிரிக்கெட்டில் 5வது அல்லது அதற்கு கீழ் பேட்டிங் வரிசையில் இறங்கி ஆயிரம் ரன்கள் மற்றும் 140 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள உலகில் ஒரே வீரர் நஜிபுல்லா மட்டும் தான்.

தோனியை விட பெஸ்ட்

தோனியை விட பெஸ்ட்

இவருக்கு அடுத்த படியாக தான் டேவிட் மில்லர், பொலார்ட், இயன் மார்கன், பெரேரா, தோனி, மேத்தியூஸ் ஆகியோர் உள்ளனர். இவ்வளவு பெரிய சாதனை படைத்தும் நஜிபுல்லாவை இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுத்தது இல்லை. 2018ஆம் ஆண்டு முதல் கடந்த மெகா ஏலம் வரை நஜிபுல்லா, விலை போகாத வீரர்கள் பட்டியலில் தான் இருப்பார்.

கண்டுகொள்ளாத ஐபிஎல் அணிகள்

கண்டுகொள்ளாத ஐபிஎல் அணிகள்

ஐபிஎல் அணிகள் தங்களுக்கான வீரர்களை ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்த, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து தேர்வு செய்வதை தான் விரும்புகிறார்கள். ஆனால் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இது போன்ற திறமையான வீரர்களை கவனிப்பது இல்லை. இதனால் தான் நஜிபுல்லா இம்முறை, என்னையும் கவனியுங்கள் என்று பேட் மூலம் உலகிற்கு காட்டியுள்ளார்.

Story first published: Wednesday, August 31, 2022, 0:49 [IST]
Other articles published on Aug 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+