For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானுக்கு ஆரம்பபே அதிர்ச்சி.. ஹாங்காங்க்கு சாதகமான சூழல்.. சாதிப்பாரா பாபர் அசாம்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய முக்கிய நாக் அவுட் ஆட்டத்தில் ஹாங்காங்கும், பாகிஸ்தானும் மோதும் ஆட்டம் துபாயில் தொடங்கியது.

Asia cup 2022 – Hong Kong won the toss and choose to field vs Pakistan

இந்தப் போட்டியில் ஆட்டத்தின் முடிவையே டாஸ் தீர்மானிக்கும். சேஸிங் செய்யும் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது.

Recommended Video

Asia Cup 2022:Bangladesh-ஐ நொறுக்கிய Afghanistan! Super 4-க்கு Qualify ஆனது|Aanee's Appeal |*Cricket

ஆசிய கோப்பை போட்டியில் ஹாங்காங்கை இந்தியா எதிர்கொண்ட போட்டி மட்டும் முடிவை மாற்றியது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறிவிடும். இதனால் இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாங்காங் அணி கத்துக்குட்டியாக கருதப்பட்டாலும், இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டனர். 151 ரன்கள் என்ற நிலையை இந்தியாவுக்கு எதிராக ஹாங்காங் தொட்டதே சாதனையாக கருதப்படுகிறது.

ஹாங்காங் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள் தான். இதனால் இன்றைய அட்டத்தை பாகிஸ்தான் Vs பாகிஸ்தான் என்று சொன்னால் சரியாக இருக்கும். இந்த நிலையில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்தவீசுவதாக அறிவித்தது. இது குறித்து பேசிய கேப்டன் நிசாகத் கான், நாங்கள் சேஸிங் சிறப்பாக செய்வோம். மேலும் பந்தவீச்சில் இன்று எங்கள் பிளாஙன படி செய்வோம் என்று தெரிவித்தார்.

டாஸை இழந்ததால் கேப்டன் பாபர் அசாம், கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தார். இருப்பினும், அதனை வெளியே காட்டி கொள்ளாத அவர், நாங்கள் பேட்டிங் செய்ய தான் மடிவு எடுத்திருந்தோம். அதிக ரன்கள் குவித்து ஹாங்காங் அணிக்கு அழுத்தம் கொடுப்போம் என்று கூறினார். இரு அணிகளும், இன்றைய ஆட்டத்தில் எந்த வீரர்களையும் மாற்றம் செய்யவில்லை.

Story first published: Friday, September 2, 2022, 19:52 [IST]
Other articles published on Sep 2, 2022
English summary
Asia cup 2022 – Hong Kong won the toss and choose to field vs Pakistan பாகிஸ்தானுக்கு ஆரம்பபே அதிர்ச்சி.. ஹாங்காங்க்கு சாதகமான சூழல்.. சாதிப்பாரா பாபர் அசாம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+