
ஹாங்காங் பலம்
ஹாங்காங் அணி கத்துக்குட்டியாக கருதப்பட்டாலும், இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டனர். 151 ரன்கள் என்ற நிலையை இந்தியாவுக்கு எதிராக ஹாங்காங் தொட்டதே சாதனையாக கருதப்படுகிறது. ஹாங்காங் அணியில் பாபர் ஹயாட், ஷேசான் அலி, ஸ்காட் மெக்கன்சி ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.

ஹாங்காங் பந்துவீச்சு
இதே போன்று பந்துவீச்சிலும் ஆயுஷ் சுக்லா, ஈஷான் கான், யாஷிம் முர்தசா ஆகியோர் தங்களுக்குள் 12 ஓவர்கள் வீசி 82 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தனர். ஹாங்காங் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள் தான். இதனால் இன்றைய அட்டத்தை பாகிஸ்தான் Vs பாகிஸ்தான் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

பாகிஸ்தான் பலம்
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை நடப்பாண்டில் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றத இல்லை. அந்த அணி பாபர் அசாமை மட்டுமே நம்பி உள்ளது. பாபர் அசாம் விரைவில் ஆட்டமிழந்துவிட்டால், அது ஹாங்காங் அணிக்கு நண்மையை கொடுக்கும்.பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் பங்கு பெறவது கேள்விக்குறியாகும்.

பிளேயிங் லெவன்
பாகிஸ்தான் உத்தேச அணி 1,பாபர் அசாம், 2, முகமது ரிஸ்வான், 3, ஃபக்கர் சமான், 4, ஆசிஃப் அலி, 5,இஃப்திகார் அகமது, 6, குஸ்தில் ஷா, 7, ஷதாப் கான், 8, முகமது நவாஸ், 9, ஷானவாஸ் தாஹானி, 10,ஹரிஸ் ராஃப், 11, நஷிம் ஷா/ முகமது ஹஸ்னாயின்


Click it and Unblock the Notifications