இந்தியா ஜெயிக்க ஐசிசி தான் காரணம்.. பாகிஸ்தானுக்கு கடைசி நேரத்தில் வைத்த செக்.. எப்படி தெரியுமா??
துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற ஸ்லோ ஓவர் ரேட்டும் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி கடந்த ஆகஸ்ட் 28ம் தேதியன்று துபாயில் நடைபெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் ஆடி 147 ரன்களை குவிக்க, பின்னர் ஆடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி
இந்த போட்டியில் இந்திய பவுலர்கள் மீது ரசிகர்கள் கோபமடைந்தனர். ஏனென்றால் 17 ஓவர்களில் 114 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருந்த பாகிஸ்தான், கடைசி 3 ஓவர்களில் 33 ரன்களை குவித்தது. அதுவரை நன்றாக வீசி வந்த பவுலர்கள், கடைசி ஓவர்களில் ரன்களை வாரி வழங்கினார்கள் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அது ஐசிசி-ன் ஏற்பாடு என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

என்ன செய்தது
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஒவ்வொரு அணியும் 85 நிமிடங்களுக்குள் தங்களது 20 ஓவர்களை வீசி இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நேரம் முடிந்த பிறகு உள்ள ஓவர்களில் 5 ஃபீல்டர்களை சர்கிளுக்குள் வைத்து பவுலிங் செய்ய வேண்டும். அந்தவகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே குறிப்பிட்ட நேரத்தில் 17 ஓவர்களை தான் வீசியது. இதனால் தான் 5 ஃபீல்டர்களை உள்ளே வைத்து பந்துவீசினர்.

சொதப்பிய பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணி 17 ஓவர்கள் வரை மிகவும் சாதூர்யமாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தி வந்தனர். எனினும் இந்த விதிமுறையால் கடைசி நேரத்தில் பாண்ட்யா தைரியமாக தூக்கி அடித்தார். இந்த நடைமுறையை கடந்த ஜனவரி மாதம் தான் ஐசிசி-யிடம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் திடீரென தற்போது இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் அமல்படுத்தி பார்த்துள்ளனர்.

என்ன காரணம்
மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் அனைத்து அணிகளும் விதிமுறைகளை பழகிக்கொண்டால் தான் அப்போது சர்ச்சைகள் ஏற்படாது என்பதால், தற்போது இருந்தே செயல்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications