Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கலவரத்தை தூண்டிய அந்த ஒரு சண்டை.. ஐசிசி எடுத்த அதிரடி நடவடிக்கை.. ரசிகர்கள் அதிருப்தி!

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் மைதானத்திலேயே அடித்துக்கொண்ட ஆசிஃப் அலி மற்றும் ஃபரீத் அகமது ஆகியோர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

Recommended Video

AFG vs PAK போட்டியில் உச்சக்கட்ட பரப்பரப்பு வீரர்கள் இடையே மோதல் Cricket

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி நேரத்தில் 2 சிக்ஸர்களை அடித்து பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது.

 ஆஃப்கானிஸ்தான் போட்டி

ஆஃப்கானிஸ்தான் போட்டி

129 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 118 ரன்களுக்கெல்லாம் 9 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த ஆசிஃப் அலி, ஆட்டத்தின் 19வது ஓவரில் ஃபரீத் அகமது வீசிய பந்தை சிக்ஸர் அடித்துவிட்டு, அவரை சீண்டினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த பந்திலேயே ஆசிஃப் அலியின் விக்கெட்டை கைப்பற்றினார். ஃபரீத்.

கடும் வாக்குவாதம்

கடும் வாக்குவாதம்

விக்கெட் விழுந்தவுடன் ஃபரீத் அகமது துள்ளிகுதித்து கொண்டாட, கடுப்பான ஆசிஃப் அலி பேட்டை தூக்கிக்கொண்டு ஃபரீத்தை அடிப்பதற்கு சென்றார். ஒருகட்டத்தில் அவரின் கைகள் ஃபரீத்தின் கன்னத்தில் பட்டன. இதற்கு ஃபரீத்தும் பதிலடி கொடுக்க மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக ரசிகர்களும் மைதானத்தில் சண்டையிட்டு கொண்டனர்.

ஐசிசியின் நடவடிக்கை

ஐசிசியின் நடவடிக்கை

இந்நிலையில் அந்த இரண்டு வீரர்களின் மீதும் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு வீரரோ, நடுவரோ மைதானத்தில் சண்டையிடும் வகையில் நடந்துக்கொண்டால் அது குற்றமாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் இரு வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து 25% தொகையை அபாராதமாக செலுத்துமாறு ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

ரசிகர்களின் கருத்து

ரசிகர்களின் கருத்து

ஆனால் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிருப்தியை தான் கொடுத்துள்ளது. ஏனென்றால் முதலில் பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி தான் சீண்டலில் ஈடுபட்டார். விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை கொண்டாடிய பவுலரை பேட்டால் அடிக்க சென்றது அவர் தான். ஆனால் அவருடன் சேர்த்து ஆஃப்கான் வீரருக்கும் தண்டனை கொடுப்பது சரியில்லை என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Friday, September 9, 2022, 11:54 [IST]
Other articles published on Sep 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+