Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்தியா, பாக் மோதும் ஆட்டம் தேதி வெளியானது.. இலங்கையில் நடைபெறுவது உறுதி

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

India Pakistan மோதும் Asia Cup 2022! | Aanee's Appeal | *Cricket | OneIndia Tamil

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக எழுந்த போராட்டத்தால் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் வெளியானது.

ஆனால், ஆஸ்திரேலிய தொடர் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சிறப்பாக நடைபெற்றதால், ஆசிய கோப்பை போட்டிகள் திட்டமிட்டப்படி இலங்கையில நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

4 ஆண்டுகள்

4 ஆண்டுகள்

கடைசியாக ஆசிய கோப்பை போட்டி 2018ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொடர் டி20 கிரிக்கெட் போட்டிகளாக நடைபெறுகிறது. இதில் 7 முறை சாம்பியனான இந்திய அணி களமிறங்குகிறது.

இந்தியா Vs பாகிஸ்தான்

இந்தியா Vs பாகிஸ்தான்

பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளும் இந்த தொடரில் விளையாடுகிறது. இதனிடையே உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக மோதல்

கடைசியாக மோதல்

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினை காரணமாக தற்போது இருத்தரப்பு போட்டிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறுவது இல்லை. இதனால் இது போன்ற பல அணிகள் பங்கேற்கும் தொடரில் தான் விளையாடுகிறது. கடைசியாக இரு அணிகளும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடியது.

டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மாதம் நடைபெறும் நிலையில், இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடர் நல்ல பயிற்சிக்களமாக அமையும். ஆனால், இரு நாடுகளின் ஆடுகளமும், மைதானமும் எவ்வித தொடர்பும் இல்லாதது. இதனால், இதில் வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை வைத்து டி20 உலகக் கோப்பை குறித்து முடிவு எடுப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Thursday, July 7, 2022, 19:46 [IST]
Other articles published on Jul 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+