Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு இறுதிப் போட்டி வாய்ப்பு இருக்கா? எஞ்சிய போட்டியில் யார் வெல்ல வேண்டும்.. முழு விவரம்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

Recommended Video

IND vs SL போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் Srilanka அணி வெற்றி *Cricket

இந்திய அணி இன்று வாழ்வா சாவா ஆட்டத்தில் தான் இலங்கையை எதிர்கொண்டது. இதில் தோல்வியை தழுவியதால் இந்திய அணி கிட்டதட்ட ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டது.

ஆனால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல இன்னும் ஒரு சிறிய அளவிலான வாய்ப்பு இருக்கிறது. அதற்கு என்ன நடக்க வேண்டும் என்று தற்போது காணலாம்.

சூப்பர் 4 சுற்று

சூப்பர் 4 சுற்று

சூப்பர் 4 சுற்றில் ஒரு அணி மற்ற 3 அணிகளுடன் ஒரு முறை மோதும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி இறுதி சுற்றுக்கு செல்லும். இதனால் குறைந்தபட்சம் 2 வெற்றிகள் பெறும் அணி, இறுதிப் போட்டிக்கு செல்லும். இந்த நிலையில், இந்தியா 2 தோல்வியை தழுவியும் இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஆப்கான் Vs பாகிஸ்தான்

ஆப்கான் Vs பாகிஸ்தான்

அதற்கு மற்ற அணிகளின் தயவு இந்தியாவுக்கு தேவைப்படும். நாளைய போட்டியில் ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் மோதுகிறது. இதில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும். ஒரு வேலை , அப்படி நடைபெறாமல் பாகிஸ்தான் வென்றால் இந்தியா அப்படியே வீட்டுக்கு திரும்பிவிட வேண்டியது தான்.

இந்தியா Vs ஆப்கானிஸ்தான்

இந்தியா Vs ஆப்கானிஸ்தான்

இதே போன்று வியாழக்கிழமை துபாயில் நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இதில் இந்தியா வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்தியா தற்போது விளையாடும் அழகை பார்த்தால் அதற்கான வாய்ப்பும் கம்மி என்று ரசிகர்களை நினைக்க வைத்துவிட்டனர்.

இலங்கை Vs பாகிஸ்தான்

இலங்கை Vs பாகிஸ்தான்

இதனைத் தொடர்ந்து கடைசி போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் மோத வேண்டும். இதில் இலங்கை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அப்படி பாகிஸ்தான் வென்றால், இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தானும், இலங்கையும் தான் செல்லும். இப்படி 3 போட்டிகளின் முடிவுகளும் இந்தியாவுக்கு சாதகமாக வந்தால், இறுதிப் போட்டிக்கு செல்லும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

Story first published: Wednesday, September 7, 2022, 0:41 [IST]
Other articles published on Sep 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+