ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. பும்ரா திடீர் விலகல்.. கம்பேக் தரும் ஸ்டார் வீரர்கள்!
மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 15 பேர் கொண்ட வீரர்கள் ரோகித் சர்மா தலைமையில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பை தொடருக்கு பயிற்சி களமாக இந்த தொடர் பார்க்கப்படுவதால் ரசிகர்களிடையே பெரும் முக்கியத்துவத்தை இந்த தொடர் பெற்றுள்ளது.
வரும் 27ஆம் தேதி தொடங்கம் இந்த தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் 28ஆம் தேதி எதிர்கொள்கிறது.

கோலி திரும்பினார்
தொடக்க வீரராக கேஎல் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளார். ரோகித் சர்மாவும், ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கவார்கள், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தன்னுடைய இடமான 3வத இடத்தில் விளையாடவார் என தெரிகிறது. நடுவரிசையில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார். இளம் வீரர் தீபக் ஹூடாவுக்கும் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அஸ்வினுக்கு வாய்ப்பு
விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மற்றும் தமிழக வீரர் தினேண் கார்த்திக் தேர்வாகியுள்ளனர். அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆல்ரவுண்டராக அணியில் இடம்பெற்றுள்ளனர். இதே போன்று தமிழக வீரர் அஸ்வினுக்கும் ஆசிய கோப்பையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்துவீச்சாளர் சாஹல் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர்கள்
இளம் வீரர் ரவி பிஸ்னாய்க்கும் ஆசிய கோப்பையில் இடம் கிடைத்துள்ளது. இவர் கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 4 விக்கெட்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. புவனேஸ்வர் குமார், ஆர்ஸ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளராக தேர்வாகியுள்ளனர். காயம் காரணமாக ஹர்சல் பட்டேல், பும்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. இதே போன்று ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், அக்சர் பட்டேல் கூடுதல் வீரராக அனுப்பபட உள்ளனர்.

இந்திய அணி
1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹ்ர்திக் பாண்டியா, 6, ஜடேஜா, 7, ரிஷப் பண்ட், 8, அஸ்வின், 9, சாஹல். 10, பிஸ்னாய், 11, புவனேஸ்வர் குமார், 12, ஆவேஷ் கான், 13, ஆர்ஸ்தீப் சிங், 14 தீபக் ஹூடா, 15, தினேஷ் கார்த்திக். கூடுதல் வீரர்கள் - ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், அக்சர் பட்டேல்


Click it and Unblock the Notifications