Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. இணையத்தை அதிர வைத்த டிக்கெட் விற்பனை.. எப்படி கட்டுப்படுத்தினர் தெரியுமா

அமீரகம்: ஆசிய கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனையில் யாரும் எதிர்பார்க்காத அளவில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ள ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 28ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

இரு அணிகளும் கடைசியாக மோதிய டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றது. எனவே இந்த தொடரில் இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

டிக்கெட் விற்பனைகள்

டிக்கெட் விற்பனைகள்

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தாமதமாகிக் கொண்டே இருந்த சூழலில் இந்தியாவின் சுதந்திர தினமான இன்று தொடங்கியது. அமீரகத்தின் பிரபல வலைதளத்தில் இந்த போட்டிக்கான டிக்கெட்கள் விற்கப்பட்டன. இதனையடுத்து இன்று அதிகாலை 12 மணி முதல் வலைதளம் அதிகப்படியான ரசிகர்களின் முயற்சியால் ஹேங்க் ஆனது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்தும் பெரும்பாலோனோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை காண ஆர்வத்துடன் டிக்கெட் வாங்க முயன்றனர். எனவே ரசிகர்களுக்கு ஏற்றவாறு க்யூ வரிசை போன்று வலைதளத்தில் உருவாக்கி சிறப்பாக கையாளப்பட்டிருந்தது.

டிக்கெட் கிடைக்கவில்லையா?

டிக்கெட் கிடைக்கவில்லையா?

முதல் போட்டிக்கு டிக்கெட் கிடைக்காத ரசிகர்களுக்கு மற்றொரு வாய்ப்பும் உள்ளது. ஆசிய கோப்பையில் இரு அணிகளும் 3 முறை மோதிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. லீக் சுற்றில் ஒரு போட்டியும், சூப்பர் 4 சுற்றில் 2வது முறையும் மோதுகிறது. ஒருவேளை இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் 3வது முறையாக மோதும்.

Story first published: Monday, August 15, 2022, 17:33 [IST]
Other articles published on Aug 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+