Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்ன கொடுமை இது”.. ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியர்களுக்கு அனுமதி மறுப்பு.. இதெல்லாம் காரணமா?

துபாய்: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியை காண இந்திய ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசிய கோப்பை இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது.

மொத்தம் 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் ஷனகா தலைமையிலான இலங்கை அணி கோப்பையை தட்டி சென்றது.

இலங்கை அணி வெற்றி

இலங்கை அணி வெற்றி

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணிக்கு இந்த சாம்பியன் பட்டம் பெரும் கம்பேக்கை கொத்துள்ளது. முதலில் விளையாடிய இலங்கை அணி 170/6 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

பரபரப்பு சம்பவம்

பரபரப்பு சம்பவம்

இந்நிலையில் இந்த போட்டியை காண இந்திய ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியை காண்பதற்காக இந்திய ஜெர்ஸியை அணிந்துக்கொண்டு ரசிகர்கள் சென்றுள்ளனர். ஆனால் அவர்களை மைதானத்தின் வாயிலிலேயே மறித்த காவலர்கள், போய் இலங்கை அல்லது பாகிஸ்தான் ஜெர்ஸியை அணிந்து வாருங்கள் என்றும், இந்திய ஜெர்ஸியை அணிந்து வரக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.

விரட்டல்

விரட்டல்

இதனால் அதிருப்தியடைந்த இந்திய ரசிகர்கள், ஏன்? இந்திய ரசிகர்கள் யாரும் இந்த போட்டியை காணக்கூடாதா என கோபமாக கேள்விகளை எழுப்ப, அந்த காவலர்கள் ஒரே முடிவாக இலங்கை அல்லது பாகிஸ்தான் ஜெர்ஸிகளை தான் அணிந்து வரவேண்டும் எனக்கூறி விரட்டியுள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் தீயாய் பரப்பப்பட்டு வருகிறது.

விதிமுறை உள்ளதா?

கிரிக்கெட் போட்டிகளின் போது, ஒரு குறிப்பிட்ட ஜெர்ஸிகளை தான் ரசிகர்கள் அணிந்து வரவேண்டும் என எந்தவித நிபந்தனைகளும் கிடையாது. ரசிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவித்து வரலாம். ஆனால் ஆசிய கோப்பையில் இதுபோன்ற நடந்தது குறித்து ஐசிசி-க்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Monday, September 12, 2022, 13:03 [IST]
Other articles published on Sep 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+