Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை ஏதுக்கு டீம்ல வச்சிருக்கீங்க.. ரசிகர்களை வெறுப்பேற்றிய ராகுல்.. கோல்டன் டக்காகி ஏமாற்றம்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேஎல் ராகுல் கோல்டன் டக்காகி ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

Recommended Video

IND vs PAK போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி*Cricket

டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணி, ஷாட் பாலை வீசி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.

அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 43 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் துணை நிற்க தவறினர். இதனால் பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் டி20

முதல் டி20

இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனையடுத்து, இந்திய வீரர் கேஎல் ராகுல், நடப்பாண்டில் முதல் முறையாக டி20 போட்டியில் களமிறங்கினார். ஐபிஎல் தொடருக்கு பிறகு 2 மாதம் கழித்து இந்திய டி20 அணிக்கு ராகுல் திரும்பினார்.

ரிஷப் பண்ட் நீக்கம்

ரிஷப் பண்ட் நீக்கம்

கேஎல் ராகுலுக்கு போதிய மேட்ச் பிராக்டிஸ் இல்லை. அவருடைய பார்ம் குறித்தும் சந்தேகம் உள்ளது. இதனால் அவர் அணியில் இடம்பெறுவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பட்டது. ஆனால், கேப்டன் ரோகித் சர்மா கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கிவிட்டு ரிஷப் பண்டை அணியிலிருந்து நீக்கினார்.

கோல்டன் டக்

கோல்டன் டக்

இந்த நிலையில், ஆட்டத்தின் 2வது பந்தை எதிர்கொண்ட கேஎல் ராகுல், அறிமுக வீரர் நசிம் ஷா பந்துவீச்சில் போல்ட் ஆனார். இது ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளது. 2 மாதம் விளையாடாத ஒரு வீரரை முக்கியமான போட்டியில் தேர்வு செய்தது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரசிகர்கள் ஆவேசம்

ரசிகர்கள் ஆவேசம்

மேலும், தொடர்ந்த அனைத்து டி20 போட்டியில் விளையாடி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் போன்ற வீரரை வெளியே உட்கார வைத்தது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றால், அதற்கு ராகுல் தான் முக்கிய காரணம் என்றும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Story first published: Sunday, August 28, 2022, 22:45 [IST]
Other articles published on Aug 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+